மருத்துவக் கல்வி இயக்குநர் பதவிக்கு வெளிப்படையான முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும்! அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.12- மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு வெளிப்படையான முறையில் தகுதியான மூத்த மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் சாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது:

வழக்கமாக மருத்துவக் கல்வி இயக்குநர் பதவிகளுக்குத் தகுதியானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அதன் அடிப் படையிலேயே நேர்காணல் நடத்தப்படும். ஆனால், தற்போது தகுதிப் பட்டியலை வெளியிடாமல் அமைச்சர் தலைமையில் நேர்காணல் நடத்தியிருப்பதும், ஓய்வு பெற்ற முன்னாள் கூடுதல் இயக்குநர் நேர்காணலை மேற்கொண்டதும் அதிர்ச்சியளிக்கிறது.

சீனியாரிட்டி அடிப்படையில் நியமனம்

புதிய நடைமுறையைக் கைவிட்டு, மருத்துவர்களின் தகுதி, பணி அனுபவம் மற்றும் பணி மூப்பு (சீனியாரிட்டி) ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு தகுதியான மூத்த மருத்துவரை மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் புதிய சிகிச்சை பிரிவுகள் தொடங்கும் போது, புதிதாக மருத்துவர்களை நியமிக்காமல் பிற மருத்துவமனைகளில் பணியாற்று பவர்களை பணிமாற்றம் செய்யும் முறை பின்பற்றப்படுகிறது. இதனால் இரண்டு மருத்துவமனைகளிலும் மருத்துவர் பற்றாக்குறை ஏற்பட்டு, மருத்து வர்களுக்குப் பணிச்சுமையும் மருத்துவப் பயனாளிகளுக்குச் சிகிச்சை பெறுவதில் தாமதமும் ஏற்படுகிறது.

எனவே, புதிய சிகிச்சை பிரிவுகள் தொடங்கும் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான புதிய மருத்துவர்களை நேரடியாக நியமிக்க வேண்டும் என்றும், துறை சார்ந்த உயர் பதவிகளுக்கு வெளிப்படையான முறையில் தகுதியான மருத்துவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *