மூத்த வழக்குரைஞர் வி.வைகுண்டம் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

விருதுநகர் மாவட்ட வழக்குரைஞர் சங்கத்தின் மூத்த வழக்குரைஞர் அன்புக்குரிய திரு. வி.வைகுண்டம் அவர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் முதல், உடல்நிலை சரியில்லாததினால், மருத்துவமனையில் தொடர் சிகிச் சையில் இருந்து,  பிறகு இல்லம் திரும்பினார். நேற்று (11.09.2026) காலை மதுரையில் உள்ள தேவகி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இரவு 7.40 மணிக்கு  சிகிச்சை பலனின்றி மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு பெரிதும் வருந்துகிறோம்.

தந்தை பெரியாரிடத்திலும், திராவிடர் இயக்கத்தின் பாலும் ஈர்ப்புள்ள மாமனிதர்! நம்மிடத்தில் அன்பு பாராட்டிய பெருமகனார். அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள், வழக்குரைஞர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், மறைந்தவருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்  

 12.9.2026         

சென்னை        

குறிப்பு: கடந்த மாதம் அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்து வந்தார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

இன்று (12.09.2026) காலை 10.30 மணிக்கு தெற்குரத வீதியில் உள்ள அவரது வீட்டில் இறுதி நிகழ்வு நடைபெறுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *