பெண்ணடிமையை முடிவிற்குக் கொண்டுவந்த திப்புவின் ஆடைச் சீர்திருத்த அரசாணை!

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதூரான்

கட்டுரை, ஞாயிறு மலர்

ஹைதர் அலியின் படையெடுப்பால் மலபார் பகுதிகள் அவரின் ஆட்சியின் கீழ் சென்றன. பின்னர் அவரது மகனான திப்பு சுல்தான் ஆட்சிக்கு வந்த பிறகு மலபார் பகுதிகளில் கடுமையான தீண்டாமையைப் பற்றி திப்பு சுல்தானிடம் தகவல் கொடுக்க அவர் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இதனால் உள்ளூர் சிற்றரசுகள் போல் செயல்படும் உயர்ஜாதி ஜமீன்தார்கள் திப்புவின் நிர்வாகத்திற்கு எதிராக பிரிட்டிஷாரைத் தூண்டிவிட்டனர். இரண்டாம் மைசூர் போர் மூண்டது. இதில் ஆங்கிலேயர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு திப்புவோடு 1784 ஆம் ஆண்டு மங்களூர் உடன் படிக்கையில் கையெழுத்திட்டனர்.

இதனை அடுத்து முதல் முதலாக திப்பு இன்றைய வட கேரளப் பகுதிக்குச் செல்கிறார். அப்போது வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் மேலாடை அணியாமல், துணி கொண்டு கோவணம் போல் அணியாமல் முன்பாகத்தை மட்டும் மறைத்திருந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த திப்பு சுல்தான் தனது ஜாகிர்தாரிடம் கேட்க அவர் உயர்ஜாதிப் பெண்களைத் தவிர அனைவரும் திறந்த மார்புடனும், துண்டுத்துணி கொண்டு இடுப்பின் முன் பகுதியை மட்டுமே மறைக்கவேண்டும் என்று கூறினார்.

இதனைக் கண்டு கோபமுற்ற திப்பு “எனது ஆளுமையின் கீழ் இந்தக் கொடுமை நடக்க நான் அனுமதிக்க மாட்டேன். இன்றிலிருந்து பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும். அதை யாரேனும் தடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்” என்று ஜாகிர்தார் மூலம் அந்தந்தப் பகுதி ஆளுநர்களுக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக பார்சி மொழியில் உள்ள பாலக்காடு அரசாணையில் இப்படி எழுதுகிறார்:

பெண்கள் ஆடை அணிவதைத் தடை செய்வது “மிருகத்தனம்” என்று விவரித்து, முழுமையான ஆடையும் தலைமறைப்பையும் (முக்காடு) அணிய வேண்டும் என்று கட்டளையிட்டார்.

அதேபோல் 1785இல் மலபார் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், “நான் மலபார் பகுதிக்குச் சென்ற போது ஆடை அணியாமல் இருக்கும் பெண்களைக் கண்டேன் மனம் வருத்தம் அடைந்தேன். இது மிருகத்தனமானது. இவை  மதவிதிகள் என்ற பெயரில் பெண்கள் இவ்வாறு இருக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஆகவே இதனை முடிவிற்கு கொண்டுவர வேண்டும்” என்று அந்தக் கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.

Lewin Bowring போன்ற பிரிட்டிஷ் எழுத்தாளர்கள், மேற்கு கடற்கரைப் பகுதிகளில் கீழ் ஜாதிப் பெண்கள் மேல் உடலை மறைக்கத் தடை இருந்ததைக் குறிப்பிட்டு, திப்பு அதை நிறுத்த உத்தரவிட்டதாகக் கூறுகின்றனர்.

இது தொடர்பாக AHWAL-UL-AARIFEEN Author : Hafiz Ghulam Fareed Publisher : Nazeer Sons Publishers, Lahore என்ற உருது நூலில் உள்ளதன் தமிழாக்கம். (மூன்றாம் பத்தி (நாணம் & ஆடை ஒழுக்கம்) “பெண்கள் ஆடை ஒழுக்கத்துடன் இருப்பதைத் திப்பு  விரும்பினார். இந்த நிலையில் அவருடைய நாட்டில்(மலபாரில்) உள்ளூர் மதப் பெண்கள்(இஸ்லாம் கிருஸ்தவம் அல்லாதவர்கள்) மிருகங்களைப் போலத் தலையிலும், மார்பிலும் துணியின்றி உலாவும் பழக்கம் கொண்டிருந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுல்தான் எந்தவொரு பெண்ணும் மேலாடை (துப்பட்டா/துணி) இல்லாமல் இருக்கக்கூடாது என்று ஆணைகள் மூலம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தார்.  அதன்பிறகே அந்த அவலட்சணமான பழக்கம் ஒழிந்தது.”

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *