“மிசா கொடுமைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் அரை மணி நேரம் தாங்குவாரா?”

இணையவழி கையெழுத்து இயக்கம்

கே.பாலகிருஷ்ணன் பேட்டி

விழுப்புரம், செப். 09- “மிசா கொடுமைகளை அரை மணி நேரம் தாங்குவாரா?” என கேள்வி எழுப்பி, முதலமைச்சர் விஜய்யின் பதிலுரைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கண்டனம் தெரி வித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத் தில் செய்தியாளர்களிடம் நேற்று (8.9.2026) அவர் பேசும்போது,

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மக் களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆழமாக பேசவில்லை. கஷ்டப்பட்டு விவசாயி விளைவிக்கும் நெல்லை கொள்முதல் செய்யாததால், மழையில் நனைந்து வீணாகிறது. கொள்முதல் செய்த நெல்லை கூட பாதுகாக்க முடியாத நிலையில் தமிழ்நாடு அரசு உள்ளது.

மேம்போக்காக பேசினாலும், மக்கள் கேட்பார்கள் என மற்ற ஆட்சியை போன்று தவெக ஆட்சியும் இருக்கிறது. இது தொடர்பாக பேச, சட்டபேரவையில் வழி இல்லை. தனிப்பட்ட விரோதங்களை தீர்த்துக் கொள்வது போல பேசுகிறார்கள்.

காவல்துறை மானிய கோரிக்கை மீது முதலமைச்சர் ஜோசப் விஜய் பதில் சொல்கிறார். எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு முதலமைச்சர் நிதானமாக பதில் சொல்ல வேண்டும். கொலையை எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டத்தான் செய்வார்கள். அதனால் அவர்கள் மீது பதிலுக்குப் பழியும், குற்றத்தையும் சுமத்துவது சரியா? இது என்ன பட்டிமன்றமா?

முதலமைச்சர் ஜோசப் விஜயின் உடல் மொழி நியாயமில்லை. 8 கோடி மக்களின் முதன்மை பிரதிநிதியாக உள்ள முதல்வர் விஜய்யே இப்படி பேசி னால், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி பேசவார்கள்? உடல்மொழி கூட பொருத்தமாக அமையவில்லை என்பது வருத்தம்.

காவல் துறை மானிய கோரிக்கையில் காவல் துறை சம்பந்தமாக பேசினால் போதும். ஊழல் குற்றச்சாட்டை பேசுவதற்கு பொதுக் கூட்டமா? ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறது என சட்டப்பேரவையில் கூறுவதால் என்ன பலன்? ஆதாரம் இருந்து வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்று கொடுக்கலாம். அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்குகள் அனைத்தும் உண்மை என கூற முடியாது. செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அமலாக்கத் துறை வழக்கை முதலமைச்சர் ஜோசப் விஜய் படித்து காட்ட வேண்டிய அவசியம் என்ன?

அவசர நிலை என்பது துயரமான சம்பவம். நாட்டில் அரை சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது. அடிப்படை உரிமைகளை பறித்தனர். யாரையும் கைது செய்யலாம் என்ற நிலை இருந்தது. சிறைச் சாலைகள் கொடூர மான அடக்குமுறை ஆயுதமாக பயன் படுத்தப்பட்டது.

தமிழ்நாடு சிறையில் பலர் உயிரிழந் தனர். கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூட கடுமையான தாக்குதலுக்கு ஆளாகினர். மிசா தாக்குதலை நியாயப்படுத்துவது, தாக்குதலுக்கு உள்ளானவர்களை கொச்சைப்படுத்துவது போல் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசுவது வன்மையான கண்டனத்துக்குரியது. அப்படியான கொடுமைகள் ஜோசப் விஜய்க்கு நடந்தால் அரை மணி நேரம் தாங்குவாரா? இது அநாகரிகமானது. வன்மையான கண்டனத்துக்கு உரியது.

அமைதியான முறையில் மக்கள் போராட அனுமதி இல்லை. அப்படி யான ஒரு மோசமான நிலை தவெக ஆட்சியிலும் நீடிக்கிறது. சட்டம் – ஒழுங்கின் பேரில் அனைவருக்கும் சமாதி கட்டுவதா?

எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் அமைச்சரவையில் இடம்பெற மாட் டோம். ஒரு ஆட்சி அமையாமல் போய் விடக் கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு அளித்தோம். தவெக கூட்டணி யில் கம்யூனிஸ்ட் இல்லை. கூட்டணி தொடர்பான கூட்டத்துக்கு நாங்கள் போகப் போவதில்லை. திமுக, தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை. இடதுசாரிகள் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளோம். திருச்சியில் மிகப் பெரிய பேரணி நடத்த உள்ளோம்.

அமைச்சர்களிடம்
கொள்கை முரண்பாடு

தேர்தல் வரும்போது சூழலுக்கு ஏற்றார்போல் முடிவு செய்வோம். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கு ஆதரவு கொடுப்பது என கலந்து பேசி முடிவு செய்வோம். ராகுல் காந்தி, ஜோசப் விஜய் என யாராக இருந்தாலும், தேர்தலுக்கு முன்பாக பிரதமர் வேட்பாளரை முன்மொழிவது தவறானது. அதை ஏற்றுக் கொள்ளமாட்டோம். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் ஓர் அணியை உருவாக்கித்தான் செயல்பட வேண்டும்.

வி.பி.சிங், தேவகவுடா, மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமர் வேட்பாளராக தேர்தலை சந்திக்கவில்லை. அதேபோல், தேர்தலுக்குப் பிறகு பிரதமரை தேர்வு செய்வதுதான் சாத்தியமானது.

தவெக அமைச்சர்களுக்குள்ளேயே கொள்கை முரண்பாடு உள்ளது. அவர் களிடம் தெளிவான புரிதல் இல்லை” என்று பாலகிருஷ்ணன் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *