கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 9.9.2026

இணையவழி கையெழுத்து இயக்கம்

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பாட்னாவில் கூடுதல் இட ஒதுக்கீடு கோரி ஓபிசி மற்றும் தாழ்த்தப்பட்டோர் அமைப்புகள் நடத்திய போராட்டத்தை காவல்துறை தடுத்தது; 65% இடஒதுக்கீடு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தி இந்து:

* தவெக-வின் 2ஆவது கூட்டத்தில் இடதுசாரிக் கட்சிகள் பங்கேற்காது என மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாடு செயலாளர் பி.சண்முகம் தெரிவித்தார். இன்று நடைபெற உள்ள தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தி டெலிகிராப்:

* தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் டில்லி பல்கலைக்கழக மாணவியை தடுப்புக் காவலில் வைத்த விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் மகளும் நொய்டா மாவட்ட ஆட்சியருமான மேதா ரூபமை அலகாபாத் உயர்நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. மேதா ரூபத்தின் நடத்தை ‘ஏளனத்திற்குரியது’ என்று உயர் நீதிமன்றம் கூறியது. அப்பாவைப் போல் மகள் என எதிர்க்கட்சிகள் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட அய்ந்து மாநிலத் தேர்தல்களை எதிர்கொள்ள பாஜக ரூ.1,473 கோடி பெற்றது. அசாம், தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் செலவுக் கணக்குகளின்படி பாஜக தலைமையகத்தின் மொத்த வரவு ரூ.1,472.8 கோடியாக இருந்தது.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *