பிஜேபியோடு இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியா?

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 9- இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருமாறு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச் சர்கள் கடிதம் வழங்கினர்.

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அக்.6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளும் கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் என்பதால், மீண்டும் அவற்றில் வெல்ல அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்னை கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் இருந்தனர்.

2 தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி எழுதிய கடிதத்தை நயினார் நாகேந்திரனிடம் கே.பி.முனுசாமி வழங்கினார். தொடர்ந்து, மற்ற தோழமைக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட அதிமுக திட்டமிட்டுள்ளது. இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் கே.பி.முனுசாமி கூறியதாவது: கடந்த தேர்தலில் மக்கள் அதிமுகவை நம்பி வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். ஆனால், வெற்றி பெற்றவர்கள் மக்களை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டனர்.

மீண்டும் மக்கள் நம்பிக்கையோடு அதிமுக வேட்பாளர்கள் களம் இறக்கப் பட்டு உறுதியாக வெற்றி பெறுவார்கள். எங்கள் கடிதத்தை பாஜக தலைவர் இன்முகத்தோடு பெற்றுக்கொண்டார். கட்சித் தலைமையுடன் ஆலோசித்து நல்ல முடிவை அறிவிப்பதாகக் கூறியுள்ளார்” என தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *