கூடல் நகரில் மாரத்தான் நடத்துவது என கலந்துரையாடலில் தீர்மானம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருமங்கலம், செப். 9- மதுரை புறநகர் மாவட்ட கலந்துறவாடல் கூட்டம் 6.9.2026 அன்று மாலை திருமங்கலத்தில் மாவட்டத் தலைவர் த.ம.எரிமலை தலைமையில், மாநில மகளிரணி அமைப்பாளர் பெ.பாக்கியலெட்சுமி மாவட்டச் செயலாளர் பா.முத்துக்கருப்பன் ஆகி யோர் முன்னிலையில் நடைபெற்றது.

மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று அறிவாசான் தந்தை பெரியாரின் அருந்தொண்டால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்றுள்ள உயர்வுகளை விளக்கியும், தமிழர் தலைவரின் கட்டளையை ஏற்று களப்பணியாற்ற வேண்டிய கடமையினை விளக்கியும் செயலாக் கவுரையாற்றினார். பெரியார் பெருந்தொண்டர் அழ.சிங்கராசன், பேரையூர் நகரத் தலைவர் பாண்டியராஜன், பகுத்தறிவாளர் பா.பாண்டி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பரப்புரையை திருமங்கலத்தில் தொடங்கி வைக்க வருகை தந்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரி வித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

தந்தைபெரியார் பிறந்தநாள் மகிழ்வாக அடையாறு ஆனந்த பவனில் 100 இனிப்புப் பெட்டி வாங்கி நண்பர்களுக்கு வழங்குவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

தந்தை பெரியார் 148 ஆவது பிறந்த நாள் மகிழ்வாக கூடல்நகரில் மாரத்தான் நடத்துவது எனவும், கொள்கைக் குடும்பங்களின் ஒன்று கூடல் விழாவினை, பேரையூரில் நடத்துவது எனவும் முடிவு செய்யப் பட்டது.

பொதுக்குழு உறுப்பினர் சி.பாண்டியன் ஆறு மாத விடுதலை சந்தா வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *