தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள் விழா பட ஊர்வலம் நடத்துதல் – கொள்கை விழாவாக இல்லங்கள்தோறும் எழுச்சியுடன் கொண்டாடுவோம் கோபி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

இணையவழி கையெழுத்து இயக்கம்

கோபி, செப். 9- 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்டக் காப்பாளர் ந.சிவலிங்கம்  இல்லத்தில் கோபி கழக மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்.  நடைபெற்றது.

கோபி மாவட்டத் தலைவர். மாநில வழக்குரைஞர் அணிச் செயலாளர் வழக்குரைஞர் மு.சென் னியப்பன், தலைமை வகித்து உரை யாற்றினார்.

செ.தி.அன்பு வீரமணி, மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் மா.சூர்யா,  ஆகியோர் கடவுள் மறுப்பு கூறினார்கள்.

மாவட்டச் செயலாளர் வெ.குணசேகரன், அனைவரையும் வரவேற்று பேசினார்.

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கூட்டத் தின், நோக்கத்தினை விளக்கிப் பேசினார்.

கழகத் துணை பொதுச் செயலாளர் வழக்குரைஞர்  சே.மெ.மதிவதனி, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, ஆகியோர் கருத்துரையாற்றினர்.

மாவட்ட காப்பாளர் ந.சிவலிங்கம், பெரியார் பெருந்தொண்டர் பெ.ராஜமாணிக்கம், ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

மாவட்ட துணைச் செயலா ளர்கள் லெ.ப.அரங்கசாமி, ஜி.கே.மூர்த்தி, பகுத்தறிவாளர் கழக  மாநில துணைத் தலைவர் ஏ.குப்பு சாமி, மகளிர் பாசறை மாநில துணை செயலாளர் ப.திலகவதி, மாநில இளைஞரணி துணை செயலாளர் ப.வெற்றிவேல், மாநில  மாணவர் கழக துணைச் செயலாளர் த.சிவபாரதி, மாவட்ட  பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் த.விஜயசங்கர், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் த.எழில் அரசு, மாவட்ட வழக்குரைஞர் அணித் தலைவர் அ.அஜித்குமார், மாவட்ட மாணவர் கழகத் துணை செயலாளர் பெ.விக்னேஷ், மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர் க.திவ்யா, பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கே.பழனிச்சாமி, அந்தியூர் ஒன்றிய தலைவர் க.கோவிந்தன், கோபி ஒன்றிய செயலாளர் கே.எம்.சிவக்குமார், நம்பியூர் ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் ம.தினேஷ்குமார், வழக்குரைஞர் அணி செயலாளர் சி.அறிவுச்செல்வி. பேராசிரியர் சி.மதிவதனி, அ.மு.சோமு, வி.லட்சுமணன், ஜி.செல்வி, முனைவர் மு.காளீஸ்வரன், குருமந்தூர் பெ.கந்தசாமி நீ.கணேசன், கே.மது, சத்தி ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.

அந்தியூர் ஒன்றியத் தலைவர் க.கோவிந்தன் நன்றி கூறினார்.

கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர். புஞ்சை புளியம்பட்டி பி.ஏ.சாமிநாதன் வாழ்விணையர்  சமூக சேவகர் சம்பூர்ண சாமி நாதன், அம்மாள் மற்றும் ஆசிரியர் பெருமாள் மறைவிற்கு  கோபி கழக மாவட்ட சார்பில் வீர வணக்கத்தையும்  அவர்கள்  குடும் பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது இக்கூட்டம்.

செப்டம்பர்-3 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் -17 மாலை  கோபியில்  பெரியார் பட ஊர்வலம் மற்றும் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் 148-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் நடை சமூக நீதிப் பயணம். (PERIYAR WALK)  செப்டம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணி அளவில்  கோபியில் மிக எழுச்சி யோடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியார் நடை நிகழ்வில் பெருவாரியான இளைஞர்களை பங்கேற்க செய்ய வேண்டுமாய் கழகப் பொறுப்பாளர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மகளிர் அணி, மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள். அறிவிக்கப் பட்டன.

மாவட்ட மகளிர் அணித் தலைவர் சத்தியமங்கலம் பூங்கொடி,

மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்  நம்பியூர் சபானா,

மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் அ.திவ்யா,

மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர்  பேராசிரியர் சி.மதிவதனி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *