கிராமங்களில் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு கால இடைவெளி 25 நாட்களாக குறைப்பு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, செப். 8- கிராமப்புறங்களில் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தற்போது சமையல் எரிவாயு விநியோக நிலைமை மேம்பட்டுள்ளதுடன், நிலுவையில் இருந்த சமையல் எரிவாயு உருளை முன்பதிவுகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது.

இதையடுத்து, இந்தக் கட்டுப்பாட்டை ஒன்றிய அரசு தளர்த்தியுள்ளது. இனி நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வேறுபாடின்றி அனைத்து ‘வீட்டு உபயோக சமையல் எரிவாயு நுகர்வோரும் 25 நாட்களுக்கு ஒருமுறை சமையல் எரிவாயு உருளை முன்பதிவு செய்யலாம்” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக, ஹார்மூஸ் நீரிணை வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நகர்ப்புறங்களில் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு 25 நாட்களுக்கு ஒருமுறையும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறையும் முன்பதிவு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.

பின்னர், சமையல் எரிவாயு விநியோகம் சீரடைந்ததையடுத்து, நகர்ப்புறங்களி்ல் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு 25 நாட்களுக்கு ஒருமுறை என்ற நடைமுறை தளர்த்தப்பட்டது. அதேசமயம், கிராமப் புறங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறை என்ற நடைமுறை தளர்த்தப்படவில்லை. இந்நிலையில், கிராமப்புறங்களிலும் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாற்றத்தை உடனடியாக அமல்படுத்துமாறு பெட்ரோலிய அமைச்சகம் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலையும் அமைச்சர் தனது பதிவுடன் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விநியோகத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது.

மேலும், சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பு இந்தியாவில் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கும் வழிவகுத்தது. மார்ச் மாதத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. அதன் பின்னர், ஜூன் மாதத்திலும் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.29 உயர்த்தப்பட்டது.

இதையடுத்து, சென்னையில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலை தற்போது ரூ.957.50 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *