மகேந்திரகிரி இஸ்ரோ மய்யத்தில் செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி!

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருநெல்வேலி, செப். 8- திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மய்யத்தில் செமி கிரையோஜெனிக் இன்ஜின் – பவர் ஹெட் டெஸ்ட் ஆர்டிகிள் (PHTA) முதல் முறையாக முழுமையான 200 டன் உந்துவிசை திறனில் இயக்கி சோதித்து வெற்றி காணப்பட்டுள்ளது.

இம்மய்யத்தில் ராக்கெட்டுகளை விண்வெளியில் செலுத்து வதற்கு தேவையான கிரையோஜெனிக் இன்ஜின்கள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்த தலைமுறை செமி கிரையோஜெனிக் இன்ஜின் பவர் ஹெட் டெஸ்ட் ஆர்டிகிள் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக பரிசோதிக்கப்பட்டு வந்தது.

இந்த உந்துவிசை சோதனைகளில் 47 சதவிகிதம் (94 டன்), 60 சதவிகிதம் (120 டன்) மற்றும் 88 சதவிகிதம் (175 டன்) என்று படிப்படியாக முன்னேற்றம் காணப் பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் 9ஆவது கட்டமாக நடைபெற்ற சோதனையில் முதல் முறையாக 100 சதவிகிதம் முழு திறனான 200 டன் உந்துவிசை திறனில் இன்ஜினை இயக்கி சோதித்து வெற்றி காணப் பட்டுள்ளது.

திட்டமிட்டபடி 35 விநாடிகளில் நடைபெற்ற இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதன்மூலம் 2,000 கிலோ நியூட்டன் திறன் கொண்ட எஸ்.இ.2000 இன்ஜின் மூலம், ராக்கெட்டில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைக் கொண்டு செல்ல முடியும். இந்த இன்ஜினுக்கு எரிபொருளாக திரவ ஆக்சிஜன் மற்றும் அதிசுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது என்று இஸ்ரோ தெரிவித் துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *