நாங்கள் கேட்ட கேள்வி என்ன? முதலமைச்சர் விஜய் அளித்த பதில் என்ன? திசைதிருப்பும் தந்திரமா? எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேட்டி

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 8- ‘முக்கிய கேள்விகளுக்கு பதில் தராமல் பஞ்ச் டயலாக் மற்றும் சினிமா வசனங்களை முதலமைச்சர் பேசியுள்ளார். பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல் படுகிறார்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அளித்த பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவையில் பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்தும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து நேற்று (7.9.2026) வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் உதயநிதி கூறியதாவது: கடந்த 3ஆம் தேதி காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டம்-ஒழுங்கு எவ்வாறு சீர்கெட்டுள்ளது என்பதை ஆதாரத்தோடு பேசியிருந்தேன். 15 கேள்விகளை முன்வைத்திருந்தேன். முதலமைச்சர் திசை திருப்பாமல் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் தரவேண்டும் என்றும் கூறியிருந்தேன்.

ஆனால், முதலமைச்சர் தனது பதிலுரையில் எந்தவித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகளை எங்கள் மேல் வைக்க ஆரம்பித்தார். நானும், எங்கள் உறுப்பினர்களும் எழுந்து, ‘முதலமைச்சர் வெளியில் பேசுவதை இங்கே பேசுகிறார். அதுக்கு பதில் கூறவேண்டும், நீங்கள் வாய்ப்பு கொடுங்கள்’ என்று பேரவைத் தலைவரிடம் கேட்டோம். ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

முதலில், எதிர்க்கட்சி தலைவருக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என்று கூறினார், பின்னர் மறுத்து விட்டார். எனவே, நாங்கள் எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க, வெளிநடப்பு செய்துள்ளோம்.

‘டைவர்ஷன் டாக்டிக்ஸ்’

சட்டம் – ஒழுங்கு சம்பந்தமாக நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் கூறாமல், வெறும் பஞ்ச் டயலாக்குகள், ‘டைவர்ஷன் டாக்டிக்ஸ்’தான் முதல்வரின் பேச்சில் இருந்தது. உதாரணத்துக்கு அவர்களுடைய சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று நாங்கள் கேட்டிருந்தோம்.

ஆனால், அதற்கு மாறாக, திமுக ஆட்சியில் இவ்வளவு வழக்குகள் இருக்கின்றன என்று எங்கள் மீது திருப்புகிறார். அதுவும், 1970-க்கே முதல்வர் சென்றுவிட்டார். சர்க்காரியா கமிஷன், மிசா பற்றி பேசுகிறார். மிசா பற்றி பேசுவதற்கு இவருக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா? சர்க்காரியா கமிஷன் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா?

முதலமைச்சர் மீது வருமானவரி வழக்கு இருக்கிறது. இங்குஇருக்கக்கூடிய பொதுப்பணித்துறை அமைச்சர் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. இந்த அரசு மீது இப்போது வெளிப்படையாக ஒரு குற்றச்சாட்டு வைக்கிறேன். முதல்வரின் நண்பர்கள், அவருடைய அலுவலகத்தில் இருக்கக்கூடிய ஆலோசகர் விஷ்ணு ரெட்டி, அவருடைய உறவினர் சுஜய் ரெட்டி, அவருடைய வணிக பங்குதாரர் அனில் ரெட்டி ஆகியோர் சேர்ந்து இப்போது சுரங்கத்தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

அரசு நடத்தும் சுரங்கத் தொழிலை இவர்களே இப்போது முழுக் கட்டுப் பாட்டில் வைத்து உள்ளனர். இதற்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிடப் போகிறேன். மேலும், ஒருதலைபட்சமாக செயல்படும் பேரவைத் தலைவருக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *