பா.ஜ.க. ஆலோசனையா? மோடியின் பாணியில் மாநிலத் திட்டக்குழுவை கலைத்துவிட்டு துறைவாரியான நிபுணர் குழுக்களை அமைக்கத் தவெக அரசு திட்டமா?

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.07 தமிழ்நாட்டில் கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘மாநில திட்டக்குழு’ என்ற அமைப்பை ஒட்டுமொத்தமாகக் கலைத்துவிட்டு, அதற்குப் பதிலாக துறைவாரியான தனித்தனி நிபுணர் குழுக்களை அமைக்கத் தவெக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திட்டக்குழுவைப் பொறுத்தவரை, முதலமைச்சரே இதன் தலைவராகச் செயல்படுவார். அதன் கீழே துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செயல் பட்டு வந்தனர். ஆட்சி மாற்றத்திற்குப் பின் முந்தைய அரசு நியமித்த துணைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகிய நிலை யில், இதுவரை புதிய துணைத் தலை வரோ அல்லது உறுப்பினர்களோ நியமிக்கப் படவில்லை.

தற்போது இந்த அமைப்பில் ஒரே ஒரு அய்.ஏ.எஸ் அதிகாரி மட்டுமே உறுப்பினர் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

1971-இல் தொடங்கப்பட்ட அமைப்பு

தமிழ்நாடு அரசின் கொள்கை சார்ந்த முடிவுகள் மற்றும் திட்டங்களை ஆய்வு செய்து அறிக்கைகளை அளிக்க 1971 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்களால்  திட்டக்குழு உருவாக்கப்பட்டது. இந்திய அரசின் திட்டங்களை வகுக்க ஒன்றிய அளவில் மட்டுமே திட்டக் குழுக்கள் இயங்கி வந்த நிலையில், மாநில அரசுக்கென இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில்தான் நிறுவப்பட்டது. அன்று முதல் அரசின் பல்வேறு கொள்கை அறிக்கைகளை தயாரித்து வழங்கி, சரியான திட்டமிடலையும், பொருளாதார விழிப்புணர்வையும் இந்தக் குழு வழங்கி வந்தது. ஆனால், திட்டக்குழுவின் தேவை, தற் போதைய பொருளாதாரச் சூழலில் குறைந்துவிட்டதாக இந்தஅரசு கருதுவதாகவும்,  ஆண்டு முழுவதும் ஒரே திட்டக்குழுவை வைத்துப் பராமரிப்பதற்குப் பதிலாக, தேவையின் அடிப்படையில் குறிப்பிட்ட துறை களுக்கு மட்டும் சிறப்பு நிபுணர் குழுக்களை அமைப்பதே அரசுக்கும் மாநில வளர்ச்சிக்கும் அதிக பலன் தரும் என்று தவெக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

ஒன்றிய பா.ஜ.க. பாணியைப் பின்பற்றுகிறதா த.வெ.க.?

இந்திய ஒன்றிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதும், அதற்கு முன்பே செயல்பட்டு வந்த ‘திட்டக் குழுவை’ (Planning Commission) அறவே நீக்கிவிட்டு ‘நிதி ஆயோக்’ (NITI Aayog) என்ற அமைப்பைக் கொண்டு வந்தது. அதில் துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் தனியார் நிறுவன உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதனால் சில பெரிய தனியார் நிறுவனங்கள் உலக அளவில் வளர்ச்சி பெற்றதே தவிர, சாமானிய மக்களுக்கும் இதர சிறு தொழில் நிறுவனங்களுக்கும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்ற விமர்சனம் நிலவுகிறது.  தற்போது தவெக அரசும் மாநில திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு நிபுணர் குழுக்களை அமைக்க முற்படுவது, ஒன்றிய அரசின் இதே பாணியைப் பின்பற்றுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *