சென்னை – மதுரை விமான சேவை அக்.25-ஆம் தேதி முதல் நிறுத்தமா?

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 7  சென்னை-மதுரை-சென்னை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை அக்டோபர் 25 முதல் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக விமானப் போக்கு வரத்து துறை வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.

இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களால் கடந்த 68 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த இந்த விமான சேவை, கட்டணம் குறைவாக இருந்ததால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த சேவை நிறுத்தப்பட்டால், இந்த வழித்தடத்தில் நாள்தோறும் 5-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கும் ‘இண்டிகோ’ மட்டுமே ஒரே விமான சேவை நிறுவனமாக நீடிக்கும் நிலை உருவாகும்.

போதிய பயணிகள் வருகை இல்லை என்பது உள்ளிட்ட காரணங்கள் சேவை நிறுத்தத்திற்கு சொல்லப்பட்டாலும், அதனை பயண முகவர்களும் சுற்றுலா அமைப்பாளர்களும் மறுத்துள்ளனர். எடுத்துக்காட்டாக, நேற்று முன்தினம் (4.9.2026) அன்று கூட சென்னையில் இருந்து மதுரைக்கு 159 பயணிகளும், மதுரையிலிருந்து சென்னைக்கு 70 பயணிகளும் இந்த விமானத்தில் பயணித்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், சென்னை-மதுரை வழித்தடமே லாபகரமாக இல்லை என்றால், மதுரை-பெங்களூரு இடையேயான சேவை மட்டும் எவ்வாறு லாபகரமாக இயங்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இத்தடத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தென் மாவட்டங் களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசி, இச்சேவையைத் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயண முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிருப்தி

திருச்சியிலிருந்து அய்தராபாத், சிங்கப்பூர் மற்றும் அய்க்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு இடங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புதிய விமான சேவைகளைத் தொடங்கியுள்ள நிலையில், மதுரை மட்டும் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்று மதுரை, சிவகாசி மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த முகவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் சுற்றுலாவுக் கான உச்சக்கட்ட காலமாகும். தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் போன்ற விழாக்கள் வர வுள்ள நிலையில், வெளிநாட்டுப் பய ணிகள் பலர் தென் தமிழ்நாட் டிற்கு வரத் திட்டமிட்டு ஏற்ெக னவே டிக்கெட் முன்பதிவு செய் திருக்கக்கூடும்.

தற்போது இந்த சேவை ரத்து செய்யப்படுவதால் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மதுரைக்கு வருவதைத் தவிர்க்கும் சூழல் உருவாகி, உள்ளூர் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படும் என மதுரை டிராவல்ஸ் நிர்வாகி கவலை தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *