புதுடில்லி, செப்.7– நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்அய்ஆர்) நடைபெற்று வருகிறது. இருகட்டங்களாக 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்அய்ஆர் பணி நிறைவு பெற்றிருக்கிறது.
3-ஆம் கட்டமாக 16 மாநிலங்கள் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்அய்ஆர் பணி நடைபெற்று வருகிறது. எஸ்அய்ஆர் குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தற்போதைய சூழலில் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம் பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.
இந்திய மக்கள் தொகை ஆணையத்தால் செய்ய முடியாத சாதனையை தேர்தல் ஆணையம் செய்து முடித்திருக்கிறது. சுமார் 15 சதவீதம் மக்கள் தொகையை தேர்தல் ஆணையம் குறைத்திருக்கிறது. எஸ்அய்ஆர் பணி முறை யாக நடைபெறவில்லை என்றே கருதுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
