மயிலாடுதுறை அருகே தேரெழுந்தூரில் ராஜராஜன் கால கல்வெட்டு கண்டெடுப்பு!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தேரெழுந்தூர், செப்.7- ஒன்றிய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவினர், மயிலாடுதுறை மாவட்டம், தேரெழுந்துார் கிராமத்தில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் அண்மையில் ஆய்வு செய்தனர்.

அப்போது இதுவரை நகலெடுக்கப்படாத, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டை அவர்கள் கண்டறிந்தனர்.

கோவிலின் அர்த்த மண்டபத்தில் உள்ள தூணில், சோழர்கால தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில், சிவனுக்கு அமுது படைக்க பொன்னை கொடையாக அளித்த தகவல் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து, கல்வெட் டியல் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் கூறிய தாவது;

இந்த கல்வெட்டு, கோவிராஜ கேசரி வர்மனான முதலாம் ராஜராஜனின் 18ஆவது ஆட்சியாண்டான, 1003இல் பொறிக்கப்பட்டுள்ளது. அதில், உய்யக் கொண் டார் வளநாட்டில் உள்ள பிரம்மதேயமான திருவழுந்துார் மகா சபையில், திருக்கடவுடை நாயனார் தெய்வத்திற்கு அமுது படைக்க, 21 கழஞ்சு தங்கம், கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

அந்த அறக்கொடை யில் இருந்து, கிடைத்த வட்டியில், அமுது படைப் பதற்கான நெல் மற்றும் மற்ற தேவைகளுக்கான பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு, அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *