ஈரோடு, செப். 7– 05.09.2026 அன்று மாலை 06.00 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் ஈரோடு மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம். நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப் பாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார், தலைமை வகித்து கூட்டத்தின், நோக்கத்தினை விளக்கிப் பேசினார்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர் த.சண்முகம் மாவட்டக் காப்பாளர் இரா.நற்குணன், பொதுக்குழு உறுப்பினர் கு.சிற்றரசு, பேராசிரியர் காளிமுத்து, மாநில இளைஞரணி செய லாளர் நாத்திக.பொன்முடி, மாவட்டச் செயலாளர் மணிமாறன், ஆகியோர் முன்னிலை வகித்து உரை யாற்றினர்.
மாவட்டத் துணைத் தலைவர் திருநாவுக்கரசு, மாநகரத் தலைவர் தே. காமராஜ், மாவட்ட இளை ஞரணிச் செயலாளர் மோகன்ராஜ், ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர், இளைஞரணித் தோழர் பார்த்திபன் நன்றி கூறினார்.
கீழ்க்கண்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
இரங்கல் தீர்மானம்
முன்னாள் மாநிலங்க ளவை உறுப்பினர் புஞ்சை புளியம்பட்டி மு.சாமிநாதன் அவர்கள் வாழ்விணையர் சமூக சேவகர் சம்பூர்ணம் அம்மாள் அவர்களின் மறைவிற்கு ஈரோடு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் வீர வணக்கத்தையும் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது இக்கூட்டம்.
செப்டம்பர் -3 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
