திருவண்ணாமலை, செப். 7- 4.9.2026 அன்று மாலை திருவண்ணாமலையில் மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி தலைமையில் மாவட்டக் கழகக் கலந்துறவாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று தலைமைச்செயற்குழு கூட்டத்தில், தமிழர்தலைவர் ஆசிரியர் தெரிவித்த அன்புக்கட்டளைகளை விளக்கியும், அறிவாசான் தந்தை பெரியார் 148 ஆவது பிறந்தநாள் விழாவை நன்றித் திருவிழாவாக நடத்திட வேண்டியதை விளக்கியும் செயலாக்கவுரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் போளூர் ப.அண்ணாதாசன், மாவட்ட ப.க.தலைவர் வெங்கட்ராமன், மாநகர செயலாளர் தேவராசன் செய்யாறு மாவட்ட துணைத் தலைவர் சேத்பட்டு நாகராசன் பெருஙகுளத்தூர் மு.ரெங்கநாதன், கொட்டையூர் இராசேந்திரன், பி.பழனி ஆகியோர் அடையாறு ஆனந்தபவன் இனிப்பு பெட்டி வாங்கிட பணம் அளித்து மகிழ்ந்தனர்.
18.9.2026 மாநில மாணவர்கழக துணைச்செயலாளர் தேவ.நர்மதா சிறப்புரையாற்றும் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்துவது,
தமிழர் தலைவர் அவர்களின் அன்புக்கட்டளைப்படி 150 இனிப்பு பெட்டி வாங்கி உற்ற நண்பர்களுக்கு வழங்கி பெரியார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக இணைச் செயலாளராக கொட்டையூர் இராசேந்திரன், கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய தலைவராக வழுதலங்குணம் க.துரை ஆகியோர் அறிவிக்கப்பட்டார்கள்.
