பாட்னா, செப்.6 வட மாநிலங்களில் தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேபாளத்தை ஒட்டியுள்ள பீகாரில் கடந்த சில நாள்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில், கனமழையால் கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கை ஆற்றின் கிளை ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கால் பீகாரில் 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும், இந்த கனமழை, வெள்ளத்தால் அம்மாநிலத்தில் 10 லட்சம் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். அதேவேளை, மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கங்கா தேவியின் கருணையோ?! கனமழையால் கங்கையில் கரை புரளும் வெள்ளத்தில் பீகாரில் 10 லட்சம் மக்கள் பாதிப்பு
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
