வைக்கம் விருதுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 12 வரை அவகாசம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 05-  தமிழ்நாடு அரசின் வைக்கம் விருதுக்கு தகுதியுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் செப்.12-க்குள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கேரளம் மாநிலம் வைக்கத்தில் பெரியார் நடத்திய போராட்டத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதி நாளன்று தமிழ்நாடு முதலமைச்சரால் வைக்கம் விருது வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கு வெளியே இந்தியாவின் இதர மாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபடும் தனிநபர் அல்லது நிறுவனத்துக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இது, ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு, பாராட்டுச்சான்று, தங்க முலாம் பூசிய வெள்ளிப்பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

அந்த வகையில் 2026-ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருதுக்கு தகுதியுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பத்தை சுயவிவர குறிப்பு, ஆற்றிய பணிகள், அதற்கான ஆவணங்கள் ஆகியவற்றுடன் “செயலர், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009” என்ற முகவரிக்கு செப்.12-க்குள் அனுப்ப வேண்டும்.

மேலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் விண்ணப்பத்தை அனுப்பலாம். தமிழ்நாடு அரசால் நியமிக்கப்படும் தனிச் சிறப்பான தேர்வுக்குழு, விருதுக்கு தகுதியான நபர் அல்லது நிறுவனத்தை தேர்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *