கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 5.9.2026

இணையவழி கையெழுத்து இயக்கம்

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* அகிலேஷ் – சிஜேபி தலைவர் சந்திப்பு: லக்னோவில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அஷூதோஷ் ரங்காவும் ரகசியமாக 90 நிமிடங்கள் சந்தித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இளைஞர்கள், குறிப்பாக ஜென்சி வாக்காளர்களை ஈர்ப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேசியதாக கூறப்படுகிறது.

* சோனியா காந்தியின் நினைவுக் குறிப்புகள்: சோனியா காந்தியின் நினைவுக் குறிப்பான BELONGING: A JOURNEY OF LOVE IN INDIA நூல் நவம்பர் 10 அன்று ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகம் மூலம் வெளியிடப்பட உள்ளது. பெங்குவின் இந்தியா வெளியீட்டில் இருந்து விலகிய நிலையில், புதிய பதிப்பகத்துடன் புத்தகம் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சுவாதந்த்ராவின் இணையப் பதிவுகள் – சர்ச்சை: சி.ஜே.பி.  போராட்டத்தின் பின்னணியில், மாணவியின் தந்தையை தாக்கியதாகக் கூறப்படும் வலதுசாரி ஆதரவாளர் ஸ்வதந்த்ரா பரத்வாஜ் உத்தரப் பிரதேசத்தில் கைது

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பீகார் – கிரீமிலேயர் விதிகளில் மாற்றம்: இட ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், பெற்றோரின் ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை கிரீமிலேயர் கணக்கில் சேர்க்க வேண்டாம் என பீகார் அரசு புதிய விதிமுறைகளை கடுமையாக்கி உள்ளது. பீகாரில் இ.பி.சி. மற்றும் ஓபிசி சமூகங்கள் இணைந்து 63%க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்டுள்ள நிலையில், இந்த மாற்றம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தி இந்து:

* ஓபிசி பட்டியல்களை ஜாதிவாரி கணக்கெடுப்பில் பயன்படுத்துவது குறித்த சர்ச்சை: ஓபிசி பட்டியலில் “ஜாதிகள் அல்ல, வகுப்புகள்” மட்டுமே இடம் பெற்றுள்ளதால் அவற்றைப் பயன்படுத்த முடியாது என்ற ஒன்றிய அரசின் வாதம் அடிப்படையிலேயே தவறானது என ஓபிசி அமைப்புகள் தெரிவித்துள்ளன. 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஓபிசி ஜாதிப் பெயர்களை மத்திய மற்றும் மாநில ஓபிசி பட்டியல்களில் இருந்து பயன்படுத்த வேண்டும் என அவை வலியுறுத்துகின்றன.

தி டெலிகிராப்:

* காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேரணிக்குப் பின் ‘சுத்திகரிப்பு’ சடங்கு – கார்கே பேரணி நடைபெற்ற பின்னர் ‘சுத்திகரிப்பு’ சடங்கு நடத்தியதாகக் கூறப்படும் உத்தரகாண்ட் பாஜக உறுப்பினர்கள் மீது பெங்களூரு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் காங்கிரஸ் ஆதிவாசி பிரிவு துணைத் தலைவர் டி.ஆர் ராமப்பா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* சட்டப்படிப்பு படிக்கின்ற மாணவர்களை கட்டுப்படுத்த பார் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை: சட்ட மாணவர்களை ஒழுங்குபடுத்தவோ, அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ BAR COUNCIL OF INDIA-க்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நல்சார் பட்டமளிப்பு விழாவின் தலைமை விருந்தினராக அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களை தகுதி நீக்கம் செய்வதாக மிரட்டிய இந்திய பார் கவுன்சில் கடிதங்களையும் நீதிமன்றம் ரத்து செய்தது.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *