பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படும்

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெரம்பலூர், செப். 5- பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை குறித்தும்,

தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா குறித்தும்,

தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயல் ஆக்குதல் குறித்தும்,

பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சி.தங்கராசு தலைமையில், மாவட்ட காப்பாளர் அக்ரி ஆறுமுகம், மாவட்ட செயலாளர் விசயேந்திரன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் நடராசன் ஆகியோர் முன்னிலையில் நேற்று (04.09.2026) கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கலந்துகொண்டு கருத்துரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்;

தந்தை பெரியாரின் பிறந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு வருகிறது. அதே போல ஒன்றிய அலுவலகங்களில் எல்லாம் மிகச் சிறப்பாக இதுவரை கொண் டாடப்பட்டு வருகின்றது.

குறிப்பாக ஜார்க்கண்டில் அய்யாவின் பிறந்த நாளை எழுச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் போடும் பதிவை பார்த்தால் அவ்வளவு சிறப்பாக உள்ளது.

அதுபோல உலக நாடுகளில் அய்யாவின் பிறந்த நாள் முதன் முதலில் அமெரிக்காவில் கொண்டா டப்பட்டது. தற்போது சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் அய்யாவின் பிறந்தநாளை நம்மை விட இன்னும் சிறப்பாக கொண்டாடக் கூடிய அளவில் அங்கே ஏற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் இந்த முறை நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தந்தை பெரியாரின் பிறந்த நாளை தஞ்சாவூரில் மிகுந்த எழுச்சியாக கொண்டாட வேண்டும் என ஆசிரியர் அவர்கள் விரும்புகிறார்கள்.

எனவே நாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரியாரின் இந்த 148ஆவது பிறந்த நாளை மிகுந்த எழுச்சியுடன் சிறப்பாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தீர்மானங்கள்:

அறிவாசன் தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ஒட்டி பெரம்பலூரில் பாபாசாகேப் அம்பேத்கர் சிலையி லிருந்து பட ஊர்வலமாக காந்தி சிலை கடைவீதி வழியாக பெரியார் சிலையை அடைந்து பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

17/9/2026 ஆம் அன்று காலையில் கழகத் தோழர்கள் ஒவ்வொருவரின் இல்லத்திலும் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.

தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில் ஆனந்த பவன் இனிப் பினை நூறு பொட்டலங்கள் வாங்க தோழர்கள் உறுதி அளித்துள்ளனர்.

மேலும் இந்த கூட்டத்தில் கிரு பாலன், ரவிக்குமார், சர்புதீன், வின் சென்ட், மலையப்பன், வேல்முருகன், ராமு, துரைசாமி, பிச்சைபிள்ளை, கருணைவேந்தன், சின்னசாமி, துரைசாமி ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *