தொழிற்பயிற்சி நிலையங்களில் செப்டம்பர் 7ஆம் தேதி வரை மாணவர்கள் நேரடிச் சேர்க்கை நீட்டிப்பு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 04- தமிழ் நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் செப்டம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிப்பதாவது: தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 132 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களும் 278 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன.

இந்தத் தொழிற்பயிற்சி நிலை யங்களில் 2026-2027-ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை கால அவகாசம் 31.08.2026 உடன் நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 07.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டுகளில் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 95 சதவீத பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். தொழிற்சாலைகளில் திறன் பெற்ற தொழிலாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளதாலும், பல்வேறு பன்னாட்டு நிறுவ னங்கள் செயல்படுவதாலும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது. குறைந்தபட்சம் ரூ.20,000 முதல் மாணவர்களின் திறனுக்கேற்றவாறு ரூ.30,000 வரை மாத ஊதியம் கிடைக்கிறது.

எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு முடித்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும்போதே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித் தேர்வராக தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு / பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழையும் பெறலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாலிடெக்னிக்குகளில் நேரடியாக இரண்டாமாண்டு டிப்ளமோ படிப்பிலும் சேரலாம்.

அரசு தொழிற்பயிற்சி நிலை யங்களில் இன்றைய தொழிற் சாலைகளுக்கு தேவையான அனைத்து தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்படுவதோடு தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளிலும் தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு தமிழ்ப் புதல் வன் மற்றும் புதுமைப்பெண் திட் டங்களின் கீழ் ரூ. 1000/- கூடுதலாக வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு வழங்கும் விலை யில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடு கால ணிகள் (Shoes), விலையில்லா பயிற் சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி ஆகிய அனைத்தும் வழங்கப்படும். குறிப்பிட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் விடுதி வசதியும் உள்ளது.

இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ் களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம். இது தொடர்பாக ஏதேனும் அய்யம் ஏற்படும் நேர்வில், அலைப்பேசி எண் – 9499055642 வாட்ஸ்அப் எண் – 9499055612 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *