களத்தில் தடம் பதித்த, பெரியார் நூற்றாண்டு மேல்நிலைப் பள்ளி குடியரசு நாள் போட்டிகளில் பதக்க மழை!

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருச்சி, செப்.3-பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் (Bharathiyar Day Games / Republic Day Sports), திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியர் தடகளப் பிரிவுகளில் பங்கேற்றுத் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய தேதி களில் நடைபெற்ற இப்போட்டி களில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ – மாணவியர் விறுவிறுப்புடன் களமிறங்கினர்.

இதில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களது அபாரத் திறனை வெளிப்படுத்திப் பதக்கங்களைக் குவித்துச் சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களின் விவரம்:

கே.தனிஷ்க் (11ஆம் வகுப்பு): 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான நீளம் தாண்டுதல் (Long Jump – Under 17 Boys) போட்டியில் 5.39 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கம் வென்றார்.

எஸ்.தனுஷ்யா (9-ஆம் வகுப்பு): 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான நீளம் தாண்டுதல் (Long Jump – Under 14 Girls) போட்டியில் முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கம் வென்றார்.

எஸ்.பி.ரிதன்யா (11-ஆம் வகுப்பு): 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான உயரம் தாண்டுதல் (High Jump – Under 17 Girls) போட்டியில் 1.30 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கம் வென்றார்.

டி.பி.அனுசிறீ (11ஆம் வகுப்பு): 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான நீளம் தாண்டுதல் (Long Jump – Under 17 Girls) போட்டியில் 4.66 மீட்டர் தூரம் தாண்டி இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சி.மதுசிறீ (12ஆம் வகுப்பு): 19 வய துக்குட்பட்ட மாணவி களுக்கான குண்டு எறிதல் (Shot Put – Under 19 Girls) போட்டியில் 6.99 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

தடகளப் போட்டி களில் பங்கேற்றுத் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த மாணவ-மாணவியரையும், அவர்களுக்குச் சிறந்த முறையில் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கோகுல் மற்றும் சவுமியா ஆகியோரைப் பள்ளித் தாளாளர், முதல்வர்,  ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *