பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் செப்.4–இல் விண்ணில் ஏவப்படுகிறது: இஸ்ரோ தகவல்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக.31– பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல். வி. எப்-17 ராக்கெட்டில் பொருத்தி வருகிற செப்டம்பர் 4-ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

பூமிக் கண்காணிப்புப் பணி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது மிகவும் லட்சியமிக்க ‘ஜூசாட்-1 ஏ’ என்று அழைக்கப்பட்ட ‘இ.ஓ.எஸ். 5’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை, ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்டில் பொருத்தி வருகிறது 4.9.2026 அன்று அதிகாலை 2.55 மணிக்கு ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் உள்ள 2-ஆவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவுகிறது.

இது வழக்கமான குறைந்த புவிச்சுற்றுப்பாதைக்கு மாறாக, சுமார் 36 ஆயிரம் கி.மீ உயரத்தில் உள்ள புவிநிலைச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்தியத் துணைக்கண்டத்தின் மீது எப்போதும் நிலைத்திருப்பதால், இது இந்தியாவின் நிலப்பரப்பைத் தொடர்ச்சியாகவும், நிகழ் நேரத்திற்கும் அருகிலும் படம் பிடித்துக் கண்காணிக்கும். இதில் மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் வகை அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் இது 19-ஆவது ராக்கெட்டாகும்.

பேரிடர் மேலாண்மை

பேரிடர் மேலாண்மை குறிப்பாக வெள்ளம், புயல், நிலச்சரிவு மற்றும் காட்டுத்தீ போன்ற இயற்கைப் பேரிடர்களை உடனுக்குடன் கண்காணித்து தகவல்களை வழங்கும். பயிர் வளர்ச்சி, காடுகளின் பரப்பளவு மாற்றம் மற்றும் நீர்நிலைகளின் நிலவரத்தை கண்காணிக்க உதவும்.

இந்தியாவின் எல்லைப் பகுதிகளைத் தொடர்ந்து கண் காணித்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான முக்கியத் தரவுகளை வழங்கும். இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவை கண்காணிக்கும் நாட்டின் முதல் ‘இமேஜிங்’ செயற்கைக் கோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *