ஜெய்ப்பூர், ஆக.31 ஜெய்ப்பூரில் நடைபெற்ற நீட் முதுநிலை தேர்வின் போது ஏற்பட்ட கடும் குளறுபடிகள் காரணமாக, மாணவர்கள் மத்தியில் பெரும் ஆத்திரமும் அதிருப்தியும் ஏற்பட்டது.
நீட் முதுநிலை தேர்வுக்கான ஏற்பாடுகளில் ஏற்பட்ட தாமதம் மற்றும் தேர்வு மய்யங்களில் நிலவிய முறையற்ற குளறுபடிகளால் தேர்வர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். பல மய்யங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் சரியான நேரத்தில் வினாத் தாள்கள்/கணினிகள் வழங்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் மாணவர்கள் தேர் வினை எழுத முடியாமல் அவதிப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஜெய்ப்பூரில் ஏற்பட்ட இந்தத் தேர்வுப் குளறுபடிகள் குறித்துப் பரிசீலித்த சம்பந்தப்பட்ட தேர்வு முகமை, அங்கு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக மறுதேர்வு நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வறையில் மாணவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச் சலையும் போராட்டங்களையும் அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
