மதுரை, ஆக.30– கல்வி நிலையங்களில் ஜாதி பாகுபாடு அகற்றுவது தொடர்பான நீதிபதி சந்துரு பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத் தக் கோரிய வழக்கில் தமிழ் நாடு அரசு பதில ளிக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
திண்டுக்கல் பர்வேஷ் முஷாரப், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் பள்ளி, கல்லூரிகளில் ஜாதி மற்றும் மதப் பாகுபாடற்ற சூழலை உருவாக்குவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அதில், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவ னங்களின் பெயர்களிலிருந்து ஜாதிப் பெயர்களை நீக்குதல், தேவையற்ற ஜாதி சார்ந்த குறிப்புகளை நீக்குதல் உள்ளிட்ட பல் வேறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. இவை அரசால் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட் டதா என்பன தொடர்பாக அறிக்கை அளிக்கவும், அவற்றை காலக் கெடுவுக்குள் அமல்படுத் தவும் குறைதீர் அமைப்பு உரு வாக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி யிருந்தார்.
மனுவை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்து, மனு தொடர் பாக அரசு பதில ளிக்க உத்தர விட்டு விசார ணையை 9.9.2026க்குத் தள்ளி வைத்தனர்.
