பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன்கூடிய மாதவிடாய் விடுப்பு குறித்து அரசு உரிய முடிவெடுக்க உத்தரவு!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மதுரை, ஆக. 29– அரசு, தனியார் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் மாதவிடாய் விடுமுறை வழங்குவது குறித்து, சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பிறகு அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அளித்துள்ளது. இல்லையெனில் நீதிமன்றமே தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்

அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை, ஆக.29  எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும் என்று பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னை பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் சமீபத்தில் ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், பரந்தூருக்குப் பதிலாக ஓசூரில் விமான நிலையம் கொண்டுவரும் திட்டம் உள்ளதாகத் தொழில்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் இதுபற்றிப் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ண ரெட்டி, “ஓசூரில் விவசாய நிலங்களை எடுத்து விமான நிலையம் கட்டக் கூடாது. பரந்தூரைப் போல ஓசூர் விவசாயிகளின் குரலையும் அரசு கேட்க வேண்டும். விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். ஓசூரில் விமான நிலையம் கொண்டுவரும் திட்டத்தைக் கைவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும். வேறு வழி கிடையாது. அதேநேரத்தில் பொருளாதாரம் வளர்வதற்கு ஓசூரில் விமான நிலையம் கொண்டு வந்தால் வளர்ச்சி உருவாகும், புதிய திட்டங்கள் உருவாகும். அதனால்தான் அங்கு நிலம் எடுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *