நேபாளத்தில் பசுபதிநாத் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் (ரிஷி பஞ்சமி) நாட்களில் நூற்றுக்கணக்கான பார்ப்பனர்கள் ஒன்று கூடி, ‘புனித’ நதி என்று கூறிக்் கொண்டு பாக்மதி நதியில் நீராடி பூணூல் (யஞோபவீதம்) மாற்றிக்கொள்வது வழக்கம்.
நேபாளத்தின் காட்மாண்டு நகரில் பசுபதிநாத் சிவன் கோயில் உள்ளது. இங்கு பாயும் பாக்மதி நதி, கங்கைக்கு இணையான ‘புனித’ நதியாம்?
ஆவணி அவிட்டம் (ருக் & யஜூர் உபா கர்மா): ஆவணி மாத பௌர்ணமி திதியில், பசுபதிநாத் நதிக்கரையில் வடமாநில மற்றும் தென்னிந்திய பார்ப்பனர்கள் ஒன்றிணைந்து ‘காயத்ரி ஜபம்’ மற்றும் வேத பாராயணம் செய்து சப்தரிஷிகளை (ஏழு முனிவர்கள்) நினைவுகூர்ந்து பூஜித்து, ஆற்று நீரில் நீராடி, பிராயச்சித்த சடங்குகளைச் செய்து பூணூல் மாற்றும் வழக்கம் நடைபெறும்.
நேபாள பசுபதிநாத் கோயிலில் உபா கர்மா பங்கேற்பது என்பது ஆன்மிக ரீதியாகவும், வேத மரபைப் பின்பற்றுவதிலும் மிகவும் ‘புனித’மானதாம்!
இதனால் தான் ஈசா ஜக்கி வெளிநாட்டில் இருந்து பல பார்ப்பனர்களை வரவழைத்து நேபாளத்திற்கு அழைத்துச் செல்வார்; இதற்காக ஒரு நபருக்கு லட்சக்கணக்கில் வசூல் செய்வார்,
தமிழ்நாட்டிலும் கும்பகோணம் காஞ்சீபுரம் உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து ‘ஆன்மிக சுற்றுலா’ என்ற பெயரில் பூணூல் மாற்ற தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலம் அழைத்துச் செல்கின்றனர்.
அதுமட்டுமல்லாது தனிப்பட்ட முறையிலும் வெளிநாட்டு வாழ் பார்ப்பனர்கள் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நேபாளத்திற்கு ரிஷி பஞ்சமி அன்று ஒன்று கூடுவார்கள்.
27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடக்க விருந்த இந்த நிகழ்விற்காக நேபாளத்தில் ஒன்று கூடி இருக்கும் போது கோரவிபத்து நேர்ந்துள்ளது. இந்திய அரசின் தகவலின்படி 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் குறித்த தகவல்கள் இதுவரை இல்லை என்று செய்தி வருகிறது,
பல அடி உயரத்திற்கு மலைமேலிருந்து உருண்டுவந்த பாறைகள் மண் மற்றும் சகதிகள் சேர்ந்து பரவி உள்ளதால் உடல்கள் எங்கு உள்ளன என்பதைக் கண்டுபிடிக்க மிகவும் சிரமமாக உள்ளதாக நேபாளத்தில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி மனித உயிர்கள் அநியாயமாக பலியாவது – மனிாபிமானம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் வருந்தவே செய்வார்கள்.
அதே நேரத்தில், ஒன்றை யோசிக்க வேண்டும். மத நம்பிக்கையால் விலை மதிப்பிடவே முடியாத மனித உயிர்கள் பறி போகின்றனவே – அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டாமா?
வெறும் கடவுள் நம்பிக்கைப் பிரச்சினை மட்டும் இதில் இல்லை. பார்ப்பனர்கள் தங்களின் உயர் ஜாதித் தன்மையை நிலை நாட்டிக் கொள்ளும் விஷத்தையும் கவனிக்கத் தவறக் கூடாது.
‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயரால் பார்ப்பனர்கள் பூணூலைப் புதுப்பித்துக் கொள்ளும் சடங்குக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
நாங்கள் பிர்மாவின் முகத்தில் பிறந்தவர்கள். துவி ஜாதியினர் (இரு பிறப்பாளர்கள்!) மற்றவர்கள் அதிலும் குறிப்பாக ‘சூத்திரர்கள்’ என்பவர்கள் நான்காம் வருணத்தவர்கள்; பிறப்பில் இழிந்தவர்கள்; கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ சூத்திரர்களிடம் பிராமணர்கள் ேவலை வாங்கிக் கொள்ளலாம்; சூத்திரர்கள் ‘வேசி மக்கள்’ என்று இழிவுபடுத்துவதன் அடையாளம்தான் பார்ப்பனர்களின் பூணூல் தரிப்பு. சூத்திரர்கள் பூணூல் அணிய அருகதை உடையவர்கள் அல்லர். அப்படி அணிந்தால் அந்த அங்கங்களை வெட்டிவிட வேண்டும். இவற்றை எல்லாம் உள்ளடக்கியதுதான் – நேபாளத்தில் பசுபதிநாத் கோயிலில் ஆண்டு தோறும் நடக்கம் ஆவணி அவிட்டமாகும்.
பாக்மதி ஆற்றில் நீராடி பூணூலைப் புதுப்பித்துக் கொள்வார்கள். இதில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தச் சடங்கில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பார்ப்பனர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் என்பதும் வருத்தத்திற்குரிய ஒன்றே!
கடவுளும், மதமும் எதையும் காப்பாற்றப் போவதில்லை தெரிந்து கொள்வீர்!
