முதலில்; நான் மனிதன். இரண் டாவது: நான் அன்பழகன். மூன்றாவது; நான் சுயமரியாதைக்காரன். நான்காவது; நான் அண்ணாவின் தம்பி. அய்ந்தாவது; கலைஞரின் தோழன். இந்த உணர்வுகள் நான் சாகிற வரையில் என்னோடு இருக்கும். இயற்கையில் வரும் ‘சாக்காடு’ என் வரலாற்றை முடிக்கலாமே தவிர, இடையிலே என் வாழ்வில் புகுவ தற்கு எவனுக்கும் இடம் இருக்காது.
நான் இளைஞனாக, சிறுவனாக, விளக்கங்கள் இல்லாத நிலையில் தந்தை பெரியார் அவர்களிடத்திலே போய் நிற்கிற காலத்தில், என்னைப் பற்றி, ‘இவன் என்ன திடுதிப்பென்று முந்திக்கொண்டு எதையும் சொல்லுகிறான்.
கொஞ்சம் அவசரப்படுகிறான்; இன்னும் வளர வேண்டியவன்’ என்றுதான் சொன்னார்களே தவிர, ‘தடுமாறுகிறான்’ என்று சொல்லவில்லை.
அறிஞர் அண்ணா அவர்கள் என்னைப் பற்றி நண்பர்களிடம் சொன்னார். “அன்பழகனிடத்திலே தெளிவு இருக்கிறது. ஆனால் சொல்ல வேண்டாததை நண்பர் களிடத்திலே சொல்லிவிடுகிறான். அப்படிச் சொல்லி விடுகிற காரணத்தாலே சில பேர் வருத்தப்படுவார்கள் என்பது பற்றி அவனுக்குக் கவலை இல்லை.”
ஆனால் அப்படிச் சொல்லக்கூடியவன் என்று அண்ணாவின் மனதிலே இடம் பெற்றவன் நான்.
– இனமானப் பேராசிரியர் அன்பழகன்
நினைவு நாள் இன்று (7.3.2023)