நீதி கேட்கும் வீதி!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தலைநகரத்துச் சாலைகளில்

தகித்துக் கிடக்கிறது தார் மட்டுமல்ல;

ஏழை மாணவர்களின்

எதிர்காலக் கனவுகளும்!

 

​புத்தகப் பைகளைச் சுமந்த தோள்கள்

போராட்டக் கொடிகளைச் சுமக்கின்றன!

விடைத்தாள்களில் மதிப்பெண் தேடிய கண்கள்

இன்று தெருக்களில் நீதியைத் தேடுகின்றன!

 

ஒரு தகுதித் தேர்வு

பல தகுதியான உயிர்களைக் குடித்த பின்னும்,

ஏன் இன்னும் இந்த மவுனம்?

 

மதிப்பெண் அட்டைகள் தீர்மானிப்பதில்லை

ஒரு மருத்துவரின் ஈரநெஞ்சை!

 

ஏழைக் குடிசைக்குள்

விளக்கேற்றத் துடித்த மருத்துவக் கனவை

ஒற்றைத் தேர்வு கொண்டு

ஊதி அணைப்பதுதான் நீதியா?

 

​மாணவர்கள் தோற்கக்கூடாது

அதிகாரத்தின் அடக்குமுறையும்

அவர்களை அச்சுறுத்தவில்லை.

 

உயிரைக் கொடுத்துப் படிக்கும் மாணவர்கள்

உரிமைக்காகப் போராட

களமிறங்கி –

 

பேனா முனைகள் இப்போது

போர் முனைகளாய் மாறுகின்றன!

 

மாணவர்களின் மருத்துவக் கனவுகள்

சாம்பலாகிப் போகாது!

நிச்சயம் ஒருநாள்

நீதியின் வாசல் திறக்கும்!

– தேன்மொழி,

மாநில மகளிரணி துணைச் செயலாளர், குடியேற்றம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *