ராஜஸ்தானில் நீட் தேர்வு பயிற்சி மாணவி தற்கொலை

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஜெய்ப்பூர், ஆக.28 நீட் தேர்வுக்கு இரண்டாவது முறையாக தயாராகி வந்த மத்தியப் பிர தேசத்தைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர், ராஜஸ்தானில் தான் தங்கியிருந்த வாடகை குடியிருப்பில் இருந்து இறந்த உடல் மீட்கப்பட்டுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஷ்பு படேல் என அடையாளம் காணப்பட்டுள்ள மாணவி, தனது தங்கையோடு தங்கி கோட்டாவில் உள்ள ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிப்பெற்று வந்துள்ளார்.

2023 முதல் கோட்டாவில் வசித்து வந்த இருவரும் ஜூலை மாதம் லேண்ட்மார்க் சிட்டி பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.

26.8.2026 ஆம் தேதியன்று பயிற்சி வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்த தங்கை கதவைத் தட்டியுள்ளார். நீண்டநேரம் ஆகியும் கவைத் திறக்காததால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மற்றவர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது, குஷ்பு அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவியின் இறந்த உடலைக் கைப்பற்றி
எம்.பி.எஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உடலை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெ னவே இறந்துவிட்டதாக தெரிவித்து
உள்ளனர்.

உடற்கூராய்வு

தொடர்ந்து குஷ்புவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கோட்டாவிற்கு விரைந்த பிறகு உடற்கூராய்வு செய்யப்பட்டு உடல் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது.

கடுமையான மன உளைச்சலிலும், அழுத்தத்திலும்…

மேலும் மாணவியின் அறையிலிருந்து எந்தவித தற்கொலைக் குறிப்பும் கண்டெ டுக்கப்படவில்லை. எனினும், கடந்த முறை எழுதிய நீட் தேர்வில் 450 மதிப் பெண்கள் எடுத்திருந்ததாகவும், அந்த மதிப்பெண் திருப்தி அளிக்காததால் அவர் கடுமையான மன உளைச்சலிலும், அழுத்தத்தி லும் இருந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாவில் உள்ள பயிற்சி மய்யங்களில் பயிற்சி பெற்றுவந்தவர்களில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 8 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *