சென்னை, ஆக. 26– சமீப காலமாக சைபர் குற்றம் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மாவட்ட மற்றும் நகர சைபர் குற்ற காவல் துறையில் நாள்தோறும் ஏராளமான புகார்கள் குவிகின்றன.
முதியோர் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்டோரை குறி வைத்து இந்த மோசடி நடக்கிறது. இதில் சைபர் குற்றம் அதிகமாக நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 7வது இடத்தை பெற்றுள்ளது.
மேற்கு வங்கம் முதலிடம், உத்தரப் பிரதேசம் 2ஆவது இடம், மராட்டியம் 3ஆவது இடத்திலும் உள்ளது. அதேபோல் சைபர் குற்ற மோசடியில் அதிக நிதி இழப்பு ஏற்படும் மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு 4ஆவது இடத்தை பெற்றுள்ளது. மராட்டியம் முதலிடம், கருநாடகா 2ஆவது இடம், உத்தரப்பிரதேசம் 3ஆவது இடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மோசடி தொடர்பாக 88 ஆயிரத்து 355 புகார்கள் வந்துள்ளன.
