சுவிட்சர்லாந்தின் CERN ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் அணுக்கருக்களைக் மோதவைத்து நுண்ணிய பெருவெடிப்பு நிகழ்வை மீட்டுருவாக்கம் செய்துள்ளனர். இதன் மூலம் பிரபஞ்சத்தின் தொடக்ககால பருப்பொருட்களின் தன்மையை ஆய்வு செய்வதே நோக்கமாகும்.
மிகச்சிறிய அணுக்கருக்களை மிக அதிக வேகத்தில் (கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில்) மோத செய்வதன் மூலம் பெரு வெடிப்பு நிகழ்ந்த பிறகு இருந்த சூழலை உருவாக்க முடியும் என்பதே இந்த ஆய்வு. இதன்படி மோதலின் பிறகு குவார்க்-குளூவான்-பிளாஸ்மா என்ற பருப்பொருள் உருவானது. இது பெருவெடிப்பு நிகழ்ந்து 1/1மில்லியன் நொடிப்பொழுதில் இருந்த சூழலை உண்டாக்கியது.
இதில் ஆக்சிஜன்-16 (16O) மற்றும் நியான்-20 (20Ne) ஆகிய அணுக்கருக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை அதிவேகத்தில் மோதுகையில் மிகக் குறுகிய நேரத்திற்கு நுண்துளி அளவில் ஈருருளை வடிவிலான பெருவெடிப்பு நிகழ்ந்து உயர்வெப்ப பொருட்கள் விரிவடைய தொடங்கியது. இதன் பிளாஸ்மாவை நேரடியாக பார்க்க முடியாது. ஆனால் பருப்பொருள் உருமாற்றத்தைக் கண்டறிவதன் மூலம் பிளாஸ்மாவின் நிலையை அறியலாம். அதாவது நேரடியாக பார்க்க முடியாத பொருளின் நிழல் மூலம் அதன் வடிவத்தை அறிவதற்கு ஒப்பாகும். இவ்வாய்வு பிரபஞ்சத்தின் புதிய தகவல்களை நமக்கு தரும்.
