14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளன உயர் கல்வி செயலாளர் பதில்கூற உயர்நீதிமன்றம் உத்தரவு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மதுரை, ஆக. 24- தமிழ்நாட்டில் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக இருப்பது தொடர்பாக உயர்கல்வி முதன்மைச் செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் எஸ்.முத்தை யாவை பதவிநீக்கம் செய்யக்கோரி ஜோசப் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.

மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். பொறுப்பு பதிவாளர் தரப்பில், தற்காலிக அடிப் படையில் பொறுப்பு பதிவாளர் பதவியை வகிக்கிறேன். அப்பதவிக்கு தேவையான அனைத்து தகுதிகளும் உள்ளன.நிரந்தர பதிவாளர் நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன என கூறப்பட்டது.

இந்த வழக்கு விசா ரணையின்போது தமிழ்நாட்டில் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை என்பதும், பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தற்போது பொறுப்பு பதிவாளர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருவதும் அனைத்து முடிவுகளும் கன்வீனர் கமிட்டி மூல மாகவே எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டன.

இதையடுத்து நீதிபதி, இந்த மனுவை விசாரிக்க நீதிமன்றம் விரும்பவில்லை. இருப்பினும் 14 பல் கலைக்கழகங்களில் பல ஆண்டுகளாக துணை வேந்தர் இல்லாத நிலை தொடர்பாக உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளரிடமிருந்து அறிக்கை பெற நீதிமன்றம் விரும்புகிறது.

துணைவேந்தர் பதவிகளை நிரப்ப எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் உயர் கல்வித் துறை முதன்மைச் செயலரிட மிருந்து உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு தலைமை வழக் குரைஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *