கை கழுவுதல்: உடல் நலனைப் பாதுகாக்க உதவும் சிறந்த வழி!

4 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

மருத்துவம்

மருத்துவர் நா.மோகன்தாஸ்
சிறுநீரகத்துறை நிபுணர், மேனாள் இந்திய மருத்துவ கழகத் தலைவர், (தமிழ்நாடு கிளை).

 

‘கை கழுவி விட்டேன்’. உணர்ச்சி வேகத்தில் உறவுகளிலும், நட்புகளிலும் சொல்லப்படுகின்ற வாக்கியம் இது. இப்படிதான் நாம் கைகழுவும் வழக்கத்தை கை விட்டதால் பல வியாதிகளுக்கு ஆளாகி இருக்கிறோம்.

உலகின் பெரும்பாலான நோய்கள் சுகாதார மின்மையால் தான் பரவுகின்றன என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

அதிலும் இத்தகைய நோய்களால் அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகள்தான். எனவே, வருங்கால சந்ததி ஆரோக்கியமானதாகத் திகழ குழந்தைகள் சோப் மூலம்
கைகளைக் கழுவும் பழக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது உலக சுகாதார நிலையம்.

இந்தியாவில், கைகளை ஒழுங்காக கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நோயால் ஆண்டுக்கு 5 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.இதே காரணத்துக்காக உலக அளவில் 29 லட்சம் குழந்தைகள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

மனித வாழ்க்கையில் நாள்தோறும் குளிப்பது, பல் விலக்குவது போலவே கை கழுவுவது சுகாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பெருந்தொற்று (கரோனா) காலத்தில் மக்களிடம் இந்தப் பழக்கம் அதிகமாக இருந்தது.தற்போது குறைந்து விட்டது. நோய்க் கிருமிகளை விரட்டி உடல் நலத்தைப் பாதுகாக்க கை கழுவும் பழக்கத்தை தொடர்வது சிறந்த வழியாகும். இரு கரங்களையும் சேர்த்து குவித்து வணங்குவதுதான் தமிழர் பண்பாடு. மாறாக ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது கை குலுக்கும் முறை இன்று நடைமுறையாகிவிட்டது.

கைகளால் இருசக்கர வாகனங்களை, எந்திரங்களை பயன்படுத்தும்போது நம் கைகளில் தூசி படர்ந்து அதன்மூலம் தூசி பற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆகவே கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.

கை கழுவுவது என்பது கைகளை தண்ணீரில் நனைப்பது இல்லை. அவ்வாறு செய்தால் கைகளில் உள்ள நோய்க் கிருமிகள் அழியாது. சோப்பு போட்டு முறையாகக் கழுவுவதன் மூலமே கிருமிகளைக் கொல்லமுடியும்.

கைகளை சோப்பு போட்டு கழுவதன் மூலம் குழந்தைகள் 50 சதவீதம் வயிற்றுப்போக்கு மற்றும் 25 சதவீதம் நிமோனியாவில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

இதுதவிர டைப்பாய்டு, காய்ச்சல், மஞ்சள்காமாலை வயிற்றுப் பூச்சிகள், பன்றிக் காய்ச்சல், எபோலா, தோல் மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்களும்அவர்களை நெருங்குவதில்லை.

நம் கைகளில் ஒட்டியுள்ள கிருமிகள், நாம் உண்ணும் உணவுடன்‌ நம் வயிற்றுக்குள் சென்று நமக்கே வியாதிகளை உருவாக்குகின்றன. நாம் மட்டும் கைகழுவினால் போதாது.வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள், சமைப்பவர்கள் அனைவரும் முறையாகக் கையைக் கழுவ வேண்டும்.

இன்றைய நாகரிக மோகத்தால் திசு பேப்பரால் கையை சாப்பிட்ட பின்பும், மலம் கழித்த பின்பும் பயன்படுத்துவது அதிகமாகிக் கொண்டு வருகிறது.

சில திருமண வீடுகளில் உணவுகளை கையால் பரிமாறுகிறார்கள். சுத்தமற்ற கையினால் வயிற்றுப்போக்கு ஏற்படுகின்றன. இதேபோல சாலை ஓரக் கடைகளிலும் துரித உணவு விடுதிகளிலும் கைகளால் உணவை எடுத்துபோட்டு சமைக்கிறார்கள். வியர்வையைக் கையால் துடைத்து அந்தக் கையால் உணவுகளைத் தயாரித்து வழங்கப்படுகிறது. இதனால் பல்வேறு நோய்கள் வருகின்றன.

கேள்வி:- கைகளை முறையாக கழுவுவது எப்படி?

பதில்:- கைகளில் உள்ள அழுக்கு மற்றும் கண்ணுக்குத் தெரியாத தூசுகளைப் போக்க கைகளை சுத்தமான நீரில் நனைக்கவும்.

சோப்பு அல்லது கைகழுவும் திரவத்தைப் பூசி நுரை வரும் வரை தேய்க்க வேண்டும்.

உள்ளங்கைகளை ஒன்றாக வைத்து நன்றாக தேய்க்கவும்.

ஒருகையின் உள்ளங்கையால் மற்றொரு கையின் பின்புறத்தை மாறி மாறி தேய்க்கவும்.

விரல்களைக் கோர்த்து விரல்களின் இடுக்குப் பகுதியில் தேய்க்கவும்.

நகங்களை உள்ளங்கையில் தேய்த்து சுத்தமாக்கவும்.மணிக்கட்டு பகுதியை நன்றாகத் தேய்க்கவும். நீரைப் பயன்படுத்தி சோப் நுரை நன்றாக போகும்படி கழுவி சுத்தமான டவலால் துடைக்க வேண்டும்.

கேள்வி:- எப்போது கைகளைக் கழுவ வேண்டும்?

பதில்:- உணவு சமைப்பதற்கு முன்னும், பின்னும்.

உணவு சாப்பிடுவதற்கு முன்பு.

கழிவறையைப் பயன்படுத்திய பிறகு.

இருமல், தும்மல் வந்து நாசியை சுத்தம் செய்த பிறகு.

குப்பைத்தொட்டி மற்றும் கழிவுகளை தொட்ட பிறகு.

உடல்நலம் இல்லாதவர்களை பராமரித்த பிறகு.

விலங்குகள் அவற்றின் உணவுகளையோ, அதன் கழிவுகளையோ தொட்ட பிறகு.

குழந்தைகளைக் கழிவறைக்கு அழைத்துச்சென்ற பிறகு.

பொது இடங்களுக்கு சென்றுவந்த பிறகு.

வீடு மற்றும்தோட்டங்களைச் சுத்தம் செய்த பிறகு.

மருத்துவமனைக்கு சென்று மருத்துவப் பயனாளிகளை பார்த்து விட்டு வந்த பிறகு.

கைகளை முறையாக கழுவாதபோது பாக்டீரியா தொற்றிக் கொள்கிறது. இவற்றை சரியான முறையில் கை, கால்களை சுத்தம் செய்தால் மட்டுமே அழிக்கமுடியும்.வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி-மயக்கம், பல நோய்களுக்கு அடிப்படைக் காரணம் கை, கால்களைச் சரியாக கழுவாமல் இருப்பதே ஆகும். தேநீர்க் கடைகளில் தேநீர் தருபவர் 4 டம்ளர்களில்  தேநீர் தயாரித்து கொடுக்கும்போது அவர் விரல்கள் தேநீரில்
துலாவும். இது நோய்க் கிருமிகளை வரவழைக்கும்.

கைகளைக் கழுவுவதால் உணவு மூலம் பரவும் நச்சுத்தன்மையைத் தடுத்து ஒட்டுமொத்த உடல்நலத்தைப் பாதுகாக்கிறது. காலரா, வயிற்றுப்போக்கு போன்ற குடல் தொற்றுகளைத் தடுக்கிறது. சளி, காய்ச்சல் மற்றும் கோவிட் தொற்றுகள் பரவுவதைக் குறைக்கிறது. குழந்தைகளுக்கு கைகளை சோப்பு போட்டு கழுவும் பழக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் தொற்றுநோய்க் கிருமிகளைத் தடுக்க முடியும்.

கைகளை கழுவுவோம்! உடல் நலம் காப்போம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *