சிவகங்கையில் தந்தை பெரியாரும், தளபதி அண்ணா அவர்களும் கலந்து கொள்ளும் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் இரட்டைக் குதிரை பூட்டிய சாரட்டில் அய்யாவும், அண்ணாவும் அமர்ந்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெற்ற மாபெரும் ஊர்வலம்.
ஊர்வலத்தின் எழுச்சியை கண்ட காங்கிரசார் தங்களின் காலித்தனத்தை வழக்கம்போல் காட்டத் தொடங்கினர். ஊர்வலப் பாதையின் முக்கிய மக்கள் நெருக்கம் இருக்கும் இடத்தில் செருப்புகளால் தோரணங்கட்டி பெரியாரை எதிர்த்து – தங்களின் வெறுப்பைக் காட்டினார்கள். ஊர்வலத்தில் வருவோரின் தலையில் இடிக்கும் அளவிற்கு தோரணம் தாழ்வாகக் கட்டப்பட்டும் இருந்தது.
அய்யா பெரியார் அவர்கள். ‘‘எதிர்ப்புக் காட்டட்டும் – நமது ஊர்வலம் தொடரட்டும்!’’ என்றார். தோழர்கள் மற்றும் பொது மக்கள் கொதித்து எழுந்தனர். அதே இடத்தில் ஊர்வலத்தை நி்றுத்தி தோழர்கள் உணர்ச்சி முழக்கமிட்டனர். பின் தோரணம் கட்டியவர்களே, தோரணத்தை அறுத்து எறிந்தனர். ஊர்வலம் அதன்பின் வெற்றிப் பெருமிதத்தோடு நடந்து முடிந்தது.
பொதுக்கூட்ட மேடையில், எதிர்ப்பைத் தூளாக்கி பெரியார் பேசத் தொடங்கியபோது, ரூ.1,001 அன்பளிப் பாக வழங்கப்பட்டது. (வழங்கியவர் நீதியரசர் சிவகங்கை சத்தியேந்திரனின் தந்தையார் ஆவார்).
செருப்புத் தோரணம் எதிர்ப்பினைத் தகர்த்து சிவகங்கையில் பெருநிதி வழங்கி வரவேற்று சிறப் பிக்கப்பட்டது என்பதுதான் எதிர்ப்பு எரிமலையை வென்றிட்ட ஈரோட்டுப் பெரியாரின் வரலாற்றுச் சிறப்பாகும்!
