
எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80ஆம் ஆண்டு மாநாட்டுக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்தனர்.

“நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் நடைபெறும் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்தை திருமங்கலத்தில் தொடங்கி வைக்க வருகை தந்த தமிழர் தலைவருக்கு பல்வேறு கட்சியினர் பயனாடை அணிவித்தனர்.

இராஜபாளையம் மாநாடு சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த தோழர்கள் மாவட்ட ப.க அமைப்பாளர் முத்தரசன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மனோகரன், இராஜபாளையம் நகரச் செயலாளர் இரா.பாண்டி முருகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெத்தையா, பாவாணர் கோட்ட பொறுப்பாளர் நெடுஞ்சேரலாதன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்தார்.
