திருச்சி, ஆக. 22- திருச்சி, கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சித் தொடர்புத் துறை சார்பில், உலக ஒளிப்பட நாளை முன்னிட்டு ‘ஷட்டர் பெஸ்ட்’ (SHUTTER FEST) என்னும் பெருமைமிக்க ஒளிப்படப் போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரிகளுக்கிடையேயும் பள்ளிகளுக்கிடையேயும் நடைபெற்ற இப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆகஸ்ட் 14, 2026 அன்று நடைபெற்ற இந்த மாநில அளவிலான போட்டிகளில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களது அசாத்தியமான ஒளிப்படக் கலைத் திறனை வெளிப்படுத்திப் பரிசுகளைத் தட்டிச் சென்றுள்ளனர்:
இரண்டாம் இடம்: இப்பள்ளி யின் பதினோராம் வகுப்பு மாணவர்
எம்.லோகேஸ்வரன் தனது அற்புதம் வாய்ந்த ஒளிப்படத்தின் மூலம் இரண்டாம் இடத்தைக் கைப்பற்றி ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார்.
மூன்றாம் இடம்: பன்னிரண் டாம் வகுப்பு மாணவர் பி.ஆதில் சமி போட்டியில் சிறப்பாகப் பங்கெடுத்து மூன்றாம் இடத்தோடு அய்நூறு ரூபாய் ரொக்கப் பரிசும் பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இயற்கையையும் உலகத்தையும் தங்கள் படக்கருவி லென்ஸ் வழியே அழகாகப் பதிவு செய்து வெற்றி பெற்றுள்ள மாணவர்களுக்கும், அவர்களை ஊக்கப்படுத்திய வழிகாட்டி ஆசிரியர் சிவராம கிருஷ்ணனுக்கும் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
