பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவில் உள்ள சிலிகான் வேலி தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூகுள் தலைமை நிர்வாக இயக்குநர் சுந்தர் பிச்சை உடன் செயற்கை நுண்ணறிவுப் பிரிவுத் தலைவர் மற்றும் ஆல்பாபெட் என்ற நிறுவனத்தின் இயக்குநர் எரிக் சுமிடாட் உடன்.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை தொடர்பான ஒரு கட்டுரையில் சிறிய சந்தேகம் ஏற்படவே செயற்கை நுண்ணறிவிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன். பொதுவாக செயற்கை நுண்ணறிவுச் செயலிகளில் நாம் பயன்படுத்தும்
எல்.எல்.எம். செயலிகள் என்பவை பல இடங்களில் செய்திகளைத் தேடி ஆய்வு செய்து தரும் இணையவழி தகவல் தொடர்புத் தளங்கள் ஆகும்.
ஆனால் அச்செயலி (கூகுள் ஜெமினி) நான் கேட்ட கேள்விக்கு இந்துத்துவச் சிந்தனைகொண்ட ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நபரால் நடத்தப்படும் ஒரு தனியார் பயிற்சி மய்யத்தில் அவர்களாகவே திருத்தி திணித்து எழுதியுள்ள பதிவுகளை சான்றாக காண்பித்தது.
அதுவும் மிகவும் நம்பகத்தன்மையாக இருக்கவேண்டும் என்பதற்காகப் பிரிவினை குறித்த எந்த ஒரு பேச்சும் இல்லாத 19ஆம் நூற்றாண்டில் நடந்ததாகப் பதிவைக் கொடுத்தது.
அதில் குறிப்பிட்டுள்ள சர் சையது அகமது கான் என்பவர் இரண்டு மதங்களுக்கு இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிட்டு இருப்பினும் நாம் எல்லாம் சகோதரர்கள் என்றார். ஆனால் அவர் முதலில் கூறியதை மட்டும் எடுத்து, பிரிவினைக்கு விதைபோட்டார் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஒருவர் நடத்தும் கோச்சிங் சென்டர் எழுதியதை எடுத்து அந்தக் குறிப்பிட்ட செயற்கை நுண்ணறிவுச் செயலி கொடுக்கிறது.
இதோ நான் கேட்டது இந்தியப் பிரிவினைக்கு முதல் கருத்து எங்கிருந்து உருவானது? எந்த ஆண்டு?
ஏ.அய். கொடுத்தது
இந்தியப் பிரிவினைக்கான அடிப்படை வித்தான “இரு தேசக் கோட்பாடு” (Two-Nation Theory) பல்வேறு கட்டங்களில் உருப்பெற்றது. இதன் முக்கிய வரலாற்று வளர்ச்சிப் படிகள்:
- ஆரம்பக்கட்ட விதை (1888)
- சர் சையது அகமது கான் (Sir Syed Ahmed Khan): இந்துக்களும் முஸ்லிம்களும் இரு வேறு சமூகங்கள் என்றும், ஒரே அமைப்பில் வாழ முடியாது என்றும் 1888-ஆம் ஆண்டளவில் தனது கருத்துகளை முன்வைத்தார்.
Physics Wallah+ 1
- கருத்தியல் வடிவம் (1930)
- அல்லாமா முகமது இக்பால் (Allama Iqbal): 1930-ஆம் ஆண்டு நடைபெற்ற அலகாபாத் முஸ்லிம் லீக் மாநாட்டில், வடமேற்கு இந்தியாவில் முஸ்லிம்களுக்கான தனிப் பகுதி அல்லது சுயாட்சி மாநிலம் வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்தார்.
Physics Wallah+ 1
- ‘பாகிஸ்தான்’ என்ற பெயர் (1933)
- சவுத்ரி ரஹ்மத் அலி (Choudhry Rahmat Ali): 1933-ஆம் ஆண்டு “நவ் ஆர் நெவர்” (Now or Never) என்ற துண்டுப்பிரசுரம் மூலம் முஸ்லிம்களுக்குத் தனி நாடு தேவை என்றும், அதற்கு ‘பாகிஸ்தான்’ என்றும் பெயரிட்டார்.
- அதிகாரப்பூர்வ அரசியல் கோரிக்கை (1940)
Physics Wallah
- லாகூர் தீர்மானம் (Lahore Resolution): 1940-ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று லாகூரில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில், முகமது அலி ஜின்னா தலைமையின் கீழ் தனி நாடு (பாகிஸ்தான்) கோரும் தீர்மானம் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டது.
மேலே கொடுத்தது தான் ஏ.அய். தந்த விளக்கம்.
இதை மாணவர்களோ அல்லது வரலாற்றை அறியாதவர்கள் படிக்கும் போது என்ன நினைப்பார்கள் இஸ்லாமியர் மட்டுமே பிரிவினையை விதைத்தனர் என்று நினைப்பார்கள்.
பரமானந்த பாய், லாலா லஜபதிராய், மதன்மோகன் மால்வியா போன்றவர்களால் உருவான இந்து மகாசபா (1916) தொடக்கத்திலேயே ஹிந்துக்கள் நாடு என்றும், பிற மதத்தவர்கள் என்றும் பிரித்துத்தான் பேசியது.
பெரும்பான்மை இந்துக்களின் நலனுக்கே முன்னுரிமை கொடுத்து சில பொது அமைப்புகள் செயல்பட்டபோது இஸ்லாமியர்களுக்கான குரலாகத் தனித்து உருவானதுதான் முஸ்லீம் லீக் 1906. இதன் ஆரம்பக்கால கொள்கை – தேசப் பிரிவினை அல்ல, இஸ்லாமியர்களுக்கும் சம உரிமை, சம நீதி என்பதே ஆகும்.
இப்படி இருக்க பிரிவினைக்கு எந்த தொடர்பும் இல்லாமல் அது குறித்த ஒரு கருத்து உருவாகும் வாய்ப்பே இல்லாத 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்த ஒருவரான சர் சையது அகமது கான் என்பவரை பிரிவினையின் துவக்கப்புள்ளி என்று செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் காட்டுவது எந்த அளவு செயற்கை நுண்ணறிவில் இந்துத்துவ அமைப்புகளின் இணைய தளங்கள் ஊடுருவி உள்ளன என்பதற்குச் சான்று.
இன்னும் ஆழமாக வரலாற்றைப் படித்தால் இந்துத்துவச் சிந்தனை கொண்ட அமைப்புகள் எந்த அளவு வரலாற்றைச் சிதைத்து போலியான தகவல்களை மக்களிடையே திணித்து வருகிறது என்பது தெரியவரும் இதற்கு செயற்கை நுண்ணறிவும் தற்போது இடம் கொடுத்துவருவது கவலைக்குரியதாகும்.
