அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித் திட்டத்தில் புதிய சிக்கல் தி.மு.க. சார்பில் வெளியுறவுத் துறைக்குக் கடிதம்!

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக.21- அனைத் தையும் மூடி மறைக்கும் பொம்மை அரசாக விஜய் அரசு செயல் பட்டுக் கொண்டிருப்பதாக தி.மு.க சட்டத்துறை இணைச் செய லாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான இ.பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப் படுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

த.வெ.க. ஆட்சியில் 8 பட்டி யலின அமைச்சர்கள் இருந்தும், ஒரு தாழ்த்தப்பட்ட மாணவர் தன் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர முடியாமல் பரிதவிக்கும் பரிதாபகரமான நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். ஏழை எளிய பட்டியல் சமூக மாண வர்கள் அயல்நாடுகள் சென்று உயர்கல்வி பயில பொருளாதாரம் எந்தவிதத்திலும் தடையாக இருக்க கூடாது என்ற உயரிய நோக்கத்தோடு அன்றைய முதல்-அமைச்சர் எங்களின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த திட்டம்தான் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம்!

அரசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை

இது தொடர்பாக பாரதிதாசன் அமைச்சருக்கும், செயலாளருக்கும் 12 முறை மின்னஞ்சல்கள் அனுப்பியும் அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. நிதி கிடைக்காததால் மருத்துவ ஆராய்ச்சி பாதிக்கப்பட்டு நண்பர்களிடம் கடன் வாங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார். மின்னஞ்சல் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத அரசு, பாரதிதாசன் வெளியிட்டிருக்கும் காணொலி வைரல் ஆன நிலையில் தவறை மறைக்க, அவர் செலவின ஆவணங்களை முறைப்படி சமர்ப்பிக்கவில்லை என பொய்யான காரணங்களை இப்போது முன் வைக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் காகத் தொடங்கப்பட்ட இயக்கமான விடுதலைச் சிறுத் தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு பொறுப்பு வகிக்கும் துறையில், தாழ்த்தப்பட்ட இன மாணவரின் அயலக உயர்கல்விக் கனவு சிதைக்கப்படுவது வேதனையின் உச்சம். சமூக நீதித்துறை அமைச்சருக்கு இந்த ஆட்சியில் கொஞ்சமாவது அதிகாரம் இருக் கிறதா? அல்லது சூப்பர் பவராக இயங்குபவர்கள்தான் எல்லா வற்றையும் தீர்மானிக்கிறார்களா?

மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் மிக முக்கியமான இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள், தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த உதவித்தொகைக்கான ஆவணங்களை அதிகாரப்பூர்வ நிதி ஆதாரமாக ஏற்றுக்கொள்ள மறுப்பதால் இந்த ஆண்டு வெளிநாடு செல்லவிருக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி குறித்த எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த ஆண்டு பிரிட்டனில் படிக்க விண்ணப்பித்த 316 மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சூழல் ஏற்பட் டுள்ளது. இந்த சிக்கலைத் தீர்க்க, உடனடியாக பிரிட்டன் தூதரகத்துடனும், இங்கிலாந்து அரசுடனும் பேசக் கோரி தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் – நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசரக் கடிதம் எழுதியிருக்கிறார். சட்டமன்றத்தில் இந்த பிரச்சினையை தி.மு.க. உறுப்பினர் கோவி.செழியன் எழுப்பிய போது அதே பொய்யை சொல்லி யிருக்கிறார் அமைச்சர் வன்னி அரசு. பிரச்சினையை தீர்ப்பதற்கு பதில், பழி தீர்க்கும் நோக்கம் மட்டுமே அவருடைய உரையில் வெளிப்பட்டிருக்கிறது.

சிறந்த நோக்கத்துடன்…

பட்டியல் இனத்தவர்களின் உயர்கல்விக்காக சிறந்த நோக்கத் துடன் திராவிட மாடல் ஆட் சியில் கொண்டு வரப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவது போலவே விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றன. இந்திய அளவில் ஒன்றிய பா.ஜ.க அரசு பட்டியல் இன மாணவர்களுக்கான கல்வி நிதியுதவிகள் பலவற்றை நிறுத்தியுள்ள நிலையில், பா.ஜ.க வழியிலேயே தமிழ்நாட்டில் உள்ள த.வெ.க. கூட்டணி அரசும் செயல்படுகிறது.

தாங்கள் பதவியில் இருப்ப தற்காக தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உழைப்பையும், கனவையும் குழிதோண்டிப் புதைக்கும் இந்த  அரசின் நாடகங்களை மக்கள் மன்றம் நிச்சயம் தண்டிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *