தொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் ஒரு வாரத்தில் மாற்றம் முதலமைச்சர் ஜோசப் விஜய் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம்

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக.21 தொகுதி மறுவரையறை தொடர்பாக நேற்று (20.8.2026) தென் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசியது சலசலப்பை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அந்தர் பல்டி அடித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், தென் மண்டலக் குழுவின் 31-ஆவது கூட்டம், நேற்று (ஆக.20) கோவளத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், “தொகுதி மறுவறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என்ற சட்டபூர்வ உறுதிமொழி தேவை. மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது. தொகுதி மறுவ ரையறையால் எந்த ஒரு மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறையாது என ஒன்றிய அரசு சட்டபூர்வ உத்தரவாதம் தர வேண்டும்” என்று தெரிவித்தது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

தனித் தீர்மானம்

முன்னதாக, தொகுதி மறுவரையறை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ‘தொகுதி மறுவரை யறையே செய்யப்பட கூடாது. தொகுதி எண்ணிக்கைகளை மாற்றாமல் மக்கள வையில் தற்போது உள்ள 543 என்ற எண்ணிக்கையே தொடர வேண்டும்’ என ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் தனித் தீர்மானமும் கொண்டு வந்தார்.

தொகுதி மறுவரையறையே வேண் டாம் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜோசப் விஜய், சில நாட்களிலேயே தனது முடிவை மாற்றி ‘பாதிப்பு இல்லாத தொகுதி மறுவரையறை’ என்ற நிலைப்பாட்டை நோக்கி நகர்ந்துள்ளார் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இது தொடர்பாக திமுக அய்டி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஒரே வாரத்தில் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பல்டி அடித்திருக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய். தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப் பவர்கள் தமிழ்நாட்டின் ’எட்டப் பர்கள்’ என ராகுல் காந்தி கூறியது இவரைத்தானா? கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தவெகவின் இந்த இரட்டை வேட நாடகத்தை கேள்வி கேட்பார்களா? இல்லை இதற்கும் முட்டுக் கொடுப்பார்களா?’ என்று தெரிவித்துள்ளது.

பல்டி அடித்து டான்ஸ் ஆடுவதில்…

அதிமுக அய்டி விங்கின் பதிவில், ‘திரைப்படங்களில் பல்டி அடித்து டான்ஸ் ஆடுவதில் பெயர் பெற்றவர் முதலமைச்சர் ஜோசப் விஜய். அதையெல்லாம் மிஞ்சிய அந்தர் பல்டியை, தற்போது தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அவர் அடித்துள்ளார்.

இப்போது நீங்கள் சொல்வதைத்தான் ஒன்றிய அரசும் சொல்லியது. இதனால் தான் அஇஅதிமுக தொகுதி மறுவரை யறை மசோதா வந்தபோது ஆதரித்தது. இப்படி பல்டி அடிப்பதற்கு எதற்கு ஒரு தீர்மான டிராமா?’ எனக் குறிப்பிட்டுள்ளது.

இதுபற்றி அமமுக பொதுச் செய லாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட பதிவில், ‘ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்துவிட்டு, அடுத்த வாரத்தில் அதே கோரிக்கையை முன்வைத்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதற்கடுத்த வாரத்தில் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பதன் மூலம், வாரத்துக்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு தான் என்ன என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

எனவே, தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகளைத் திசைதிருப்பும் வகையில், இதுபோன்ற அவசியமற்ற தீர்மானங்களை சட்டப்பேரவையில் முன்வைப்பதை விட்டுவிட்டு, தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர்  ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *