காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்க பயோமெட்ரிக் முறை ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஆக21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒருங்கிணைந்து, காணாமல் போன மற்றும் மீட்கப்பட்ட குழந்தைகளுக்காக தனியுரிமைப் பாதுகாப்பு களுடன் கூடிய டிஎன்ஏ மற்றும் பயோமெட்ரிக் அடையாள முறையை உருவாக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

ரீபக் பன்சால் என்பவர் சார்பில் வழக்குரைஞர் பிரவீர் சவுத்ரி தாக்கல் செய்த அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியக் கோரிக்கைகள்:

அறிவியல் பூர்வ ஒப்பீடு: அடையாளம் தெரியாத மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குழந்தைகளைத் தேடும் பெற்றோர்களின் டிஎன்ஏ மாதிரிகளை, உரிய ஒப்புதல் மற்றும் தனியுரிமை விதிகளுடன் சேகரித்து அறிவியல் பூர்வமாக ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

ஒருங்கிணைக்கப்பட்ட தரவுத்தளம்: காவல் துறை பதிவுகள், காப்பகங்கள், குழந்தைகள் நலக் குழுக்கள் மற்றும் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவுகளின் தற்போதைய தரவுகளை ஒரே தளத்தில் இணைக்க வேண்டும்.

நிலையான வழிகாட்டுதல்கள்: குழந்தை களைக் கண்டறிதல், டிஎன்ஏ சோதனை, மறுவாழ்வு, இழப்பீடு மற்றும் நீண்டகால கண்காணிப்பு ஆகியவற்றுக்கு முறையான நிலையான வழிகாட்டு நடைமுறைகளை  உருவாக்க வேண்டும். இந்த மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், இது குறித்து பதில் அளிக்குமாறு ஒன்றிய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தாக்கீது அனுப்பி உத்தரவிட்டுள்ளனர்.

 

நாடாளுமன்றக் குழு அமைப்பு

அமலாக்கப்படும் சட்ட விதிகளைக் கண்காணிக்கப் புதிய குழு நியமனம்

புதுடில்லி, ஆக.21 மக்களவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களை அமல்படுத் துவதற்காகப் பல்வேறு ஒன்றிய அமைச்சகங்கள் உருவாக்கும் விதிகள் மற்றும் துணை விதிகளை முறையாகவும் துல்லியமாகவும் கண்காணிக்க நாடாளுமன்றக் குழு மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக ஜனசேனா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலசோவ்ரி வல்லபனேனி நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவின் முக்கிய உறுப்பினர்கள் பாலசோவ்ரி வல்லபனேனி (ஜனசேனா) – குழுத் தலைவர் கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) முகமது ஜாவேத் (காங்கிரஸ்) மஹுவா மொய்த்ரா (திரிணாமுல் காங்கிரஸ்)  என்.கே. பிரேமச்சந்திரன் (ஆர்டிபி) ஆ. ராஜா (திமுக)

மக்களவையில் இயற்றப்படும் சட்டங் களுக்கு ஏற்ப அமைச்சகங்கள் வகுக்கும் துணை விதிகள் நாடாளுமன்றத்தின் நோக்கத் திற்கு ஏற்ப அமைந்துள்ளனவா என்பதை ஆய்வு செய்து கண்காணிப்பதே இக்குழுவின் முக்கியப் பணியாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *