தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களின் 93 ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக திருநெல்வேலி மாநாட்டில் 100 மூட்டை சிமெண்ட் ‘பெரியார் உலக’த்திற்கு வழங்கப்பட்டது!

சிறப்பு புத்தக சலுகைகள்

பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநிலத் தலைவர் பேரா.சுப்ரமணியம் குடும்பத்தினர், தச்சநல்லூர் பானுமதி இராசேந்திரன், முத்துலெட்சுமி, வேல்முருகன், சங்கரம்மாள், மகேசு, மாரிகணேசு, அம்பிகா, தராசு சுப்ரமணியம், காப்பாளர் சி.வேலாயுதம், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.சூர்யா, தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், மூலக்கரைப்பட்டி குமார், தென்கலம் தோழர்கள்– வாசு.அய்யப்பன்,
அய்.சீனிவாசன், கு.வெள்ளத்துரை, வெ.மலர்விழி, க.பரமசிவன், ப.மகேசுவரி, ஆர்.லெட்சுமணன், கூ.செகநாதன், ஜெ.செல்லம்மாள், க.கணபதி, க.அமராவதி, தங்கராசு, த.மாரியம்மாள் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93 ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக 93 சிமெண்ட் மூட்டைகளை வழங்கினர்.

இதைக் கண்ணுற்று  திடீரென எழுந்த கழகக் காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை, ‘‘ஏழுமூட்டை சிமெண்ட் நான் தருகிறேன். நூறு மூட்டையாகக் கொடுங்கள்’’ என அறிவித்து, அதற்குரிய தொகையையும் வழங்கினார். இந்நிகழ்வு, அனைவரையும் நெகிழச் செய்துவிட்டது. கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இதை சுட்டிக்காட்டிப் பேசியபோது, ‘‘பெரியார் உலகத்திற்கு 100 மூட்டை சிமெண்ட் கொடுப்பதாக அறிவித்தவுடன், உள்ளபடியே மகிழ்ச்சியாக இருந்தாலும், இதை  எப்படி எடுத்துச் செல்வது? வழியில் சிமெண்ட் கடத்தல் என்று பிடித்து விட்டால் என்ன செய்வது? என்றெல்லாம் சிந்தித்தேன். ஆனால், அதைக் கொடுத்தவர்களே சிந்தித்து, தொகையாகக் கொடுத்து அதற்குத் தீர்வும் கண்டு இருக்கிறார்கள்’’ என்று சொல்லி, வெடிச்சிரிப்பை உண்டாக்கி விட்டார் (திருநெல்வேலி, 19.08.2026).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *