பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநிலத் தலைவர் பேரா.சுப்ரமணியம் குடும்பத்தினர், தச்சநல்லூர் பானுமதி இராசேந்திரன், முத்துலெட்சுமி, வேல்முருகன், சங்கரம்மாள், மகேசு, மாரிகணேசு, அம்பிகா, தராசு சுப்ரமணியம், காப்பாளர் சி.வேலாயுதம், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.சூர்யா, தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், மூலக்கரைப்பட்டி குமார், தென்கலம் தோழர்கள்– வாசு.அய்யப்பன்,
அய்.சீனிவாசன், கு.வெள்ளத்துரை, வெ.மலர்விழி, க.பரமசிவன், ப.மகேசுவரி, ஆர்.லெட்சுமணன், கூ.செகநாதன், ஜெ.செல்லம்மாள், க.கணபதி, க.அமராவதி, தங்கராசு, த.மாரியம்மாள் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93 ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக 93 சிமெண்ட் மூட்டைகளை வழங்கினர்.
இதைக் கண்ணுற்று திடீரென எழுந்த கழகக் காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை, ‘‘ஏழுமூட்டை சிமெண்ட் நான் தருகிறேன். நூறு மூட்டையாகக் கொடுங்கள்’’ என அறிவித்து, அதற்குரிய தொகையையும் வழங்கினார். இந்நிகழ்வு, அனைவரையும் நெகிழச் செய்துவிட்டது. கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இதை சுட்டிக்காட்டிப் பேசியபோது, ‘‘பெரியார் உலகத்திற்கு 100 மூட்டை சிமெண்ட் கொடுப்பதாக அறிவித்தவுடன், உள்ளபடியே மகிழ்ச்சியாக இருந்தாலும், இதை எப்படி எடுத்துச் செல்வது? வழியில் சிமெண்ட் கடத்தல் என்று பிடித்து விட்டால் என்ன செய்வது? என்றெல்லாம் சிந்தித்தேன். ஆனால், அதைக் கொடுத்தவர்களே சிந்தித்து, தொகையாகக் கொடுத்து அதற்குத் தீர்வும் கண்டு இருக்கிறார்கள்’’ என்று சொல்லி, வெடிச்சிரிப்பை உண்டாக்கி விட்டார் (திருநெல்வேலி, 19.08.2026).
