வினாத்தாள் கசிவு : குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக. 20- வினாத்தாள் கசிவு வழக்கு குற்றவாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர் களின் சொத்துகளை முடக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு குறித்து ஒன்றிய அரசு, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பி உள்ளது.

பாஜக மூத்த தலைவரும் வழக்குரைஞ ருமான அஸ்வினிகுமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். அதில், “வினாத்தாள் கசிவு வழக்குகளில் குற்றம்சாட்டப்படு வோருக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டம், பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் பினாமி சொத்து தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்த வேண்டும். குற்றவாளிகள், அவர்களது உறவினர்களின் சொத்து களை முடக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் அஸ்வினி குமார் உபாத்யாய் கூறியதாவது: வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபடுவோரின் சொத்துகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துகளையும் முழுமையாக மதிப்பீடு செய்து ஊழல் தடுப்பு, பணமோசடி தடுப்பு, பினாமி சொத்து தடுப்பு மற்றும் கறுப்புப் பணம் தொடர்பான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றத்தில் நேரடியாகவும் மறைமுக மாகவும் தொடர்புடையவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட கால வரம்பு நிர்ணயித்து புலன் விசாரணை, வழக்கு விசாரணையை முடிக்க உத்தர விட வேண்டும். வினாத்தாள் கசிவு குற்றங் களுக்கான தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும். இவ்வாறு அஸ்வினி குமார் வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஒன்றிய, மாநில அரசுகள் பதில் அளிக்க தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *