கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 19.8.2026

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

டெக்கான் கிரானிக்கல், சென்னை :

* கருநாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்; சிபிஅய் விசாரணை நடத்த அனைத்து கட்சிகள் கோரிக்கை: சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் காரசார விவாதம்.

* எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாதீர்கள், கருநாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆத்திரம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* உச்சநீதிமன்றம், ஜந்தர் மந்தர் மாணவர் போராட்டத்தில் காவல்துறை நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. மாணவர்கள் மீதான வழக்குகள் குறித்து காவல் துறையின் நடவடிக்கைகளையும் இக்குழு ஆய்வு செய்யும்.

* ஆந்திரப் பிரதேச அமைச்சரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 34% இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 13 மாவட்ட பரிஷத்துகளை 28 ஆக மறுசீரமைக்கவும் அமைச்சரவை முடிவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 

* முதன்மைத் தேர்வு நெருங்கும் நிலையில் யு.பி.எஸ்.சி-க்கு எதிராக மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT) நோட்டீஸ்: யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வில் 8 கேள்விகளில் பிழைகள் உள்ளதாக 4 தேர்வர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்; இதனால் 16 மதிப்பெண்களுக்கு மேல் பாதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தி இந்து:

* பி.எம். கேர்ஸ் நிதி (PM CARES) நிதி ஏன் பெருமளவு பயன்படுத்தப்படாமல் உள்ளது? ரூ.8,452 கோடி நிதியில் 2024–2025ஆம் ஆண்டில் வெறும் 0.01% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆர்.டி.அய். செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *