உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்த புதிய இயக்குநரகம் ! தமிழ்நாடு அரசு முடிவு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 19- தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு, ‘வெற்றித் தமிழகம்’ எனும் பெயரில் அடுத்த 5 ஆண்டுகளில் துறைகள் வாரியாக 436 தொலைநோக்குத் திட்டங்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதன் அடிப்படையில் ஊரக வளர்ச்சித் துறையில் அனைவருக்கும் குடிநீர், வீடு, சேதமற்ற சாலைகள், அனைத்து ஊராட்சிகளையும் இணைக்கும் சாலைகள், கிராமப்புற ஊரக வேலை உறுதித் திட்டம், 5,000 கிராமங்களுக்கு நகர்ப்புற கட்டமைப்பு, கிராமப்புற தொழில் உள் கட்டமைப்புத் திட்டம், கிராமப்புற சந்தைகள் ஆகிய 8 திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

இதற்கிடையே, பெருநகரங்களை ஒட்டிய கிராமங்களில் தொழில் வளர்ச்சி, குடியிருப்புகள் விரிவாக்கம், விவசாய நிலங்கள் பயன்பாடு மாற்றம் ஆகியவற்றால் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது.

ஆனால், இந்தப் பகுதிகள் குடிநீர், சாலை, வடிகால், திடக்கழிவு மேலாண்மை மற்றும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. இதை சரி செய்ய நகர்ப்புற வளர்ச்சி இயக்குநரகம் உருவாக் கப்படுகிறது.

673 நகர்ப்புற ஊராட்சிகள்

சென்னை, நீலகிரி தவிர்த்துள்ள 36 மாவட்டங் களில் உள்ள 4,923 கிராம ஊராட்சிகளில், 673 நகர்ப்புற ஊராட்சிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றின் நிர்வாகத் திறனை நகர்ப்புற வளர்ச்சி இயக்குநரகம் மூலமாக மேம்படுத்த மாநில, மாவட்ட, வட்டார, கிராம அளவில் புதிதாக 4,490 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

அதன்படி மாநில அளவில் 99, மாவட்ட அளவில் 767, ஊராட்சி ஒன்றிய அளவில் 738, கிராம ஊராட்சி அளவில் 2,886 பணியிடங்கள் உருவாக் கப்பட உள்ளன. இதற்கான செலவினமாக ஆண்டுக்கு ரூ.107 கோடியை மாநில அரசு ஒதுக்கும்.

இந்தத் துறை அதிகாரி களின் பயன்பாட்டுக்காக 20 வாகனங்கள் ரூ.2.4 கோடியில் வாங்கப்பட உள்ளன. அதேபோல், கிராம ஊராட்சி அளவில் உருவாக்கப்படும் 2,886 பணியிடங்களுக்கான செலவினம் ரூ.16.55 கோடியை, அந்தந்த கிராம ஊராட்சிகளின் நிதியில் இருந்தே பயன் படுத்திக் கொள்ளத் திட்ட மிடப்பட்டுள்ளது.

இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படாது. இவ்வாறு ஊரக வளர்ச்சி துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *