யுஜிசி நெட் தேர்விற்கு வந்த புகார்களை அடுத்து ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல் பாடங்களுக்கான மறுதேர்வு அறிவிப்பு!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.18- யுஜிசி நெட் தேர்வில் ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான மறுதேர்வு தேதிகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

87 பாடங்களுக்கான 2026 யுஜிசி நெட் தேர்வு ஜூன் 22 முதல் ஜூன் 30 வரை நடைபெற்றது.

இதில், 84 பாடங்களுக்கான தற்காலிக விடைக் குறிப்புகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்டது. ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு பிழைகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்த நிலையில் அவற்றிற்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை.

இதுபற்றி ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இத்தேர்வுகளை எழுதிய விண்ணப்பதாரர்களிடமிருந்து பல புகார்கள் வந்ததையடுத்து முக்கிய அறிஞர்களின் பெயர்களில் எழுத்துப் பிழைகள், புத்தகத் தலைப்புகளில் பிழைகள் போன்ற பல வகையான பிழைகள் கண்டறியப்பட்ட நிலையில், இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

பிழைகளின் தன்மை காரணமாக இந்த மூன்று பாடங்களுக்கான தேர்வுகளையும் புதிதாக நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து, ஆங்கிலம் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான மறுதேர்வு செப்டம்பர் 9-ஆம் தேதியும், சமூகவியல் பாடத்திற்கான தேர்வு செப்டம்பர் 10ஆம் தேதியும் நடைபெறும் என யுஜிசி அறிவித்துள்ளது.

மறுதேர்வுகள் விவரம்

ஆங்கிலம்: செப்டம்பர் 9, முதல் பிரிவு – காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை

வணிகவியல்: செப்டம்பர் 9, இரண்டாம் பிரிவு – மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை

சமூகவியல்: செப்டம்பர் 10, முதல் பிரிவு – காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *