திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 50ஆவது ஆண்டு விளையாட்டு விழா

3 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பெரியார் கல்வி நிறுவனங்கள்

திருச்சி, ஆக.17- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 50ஆவது ஆண்டு விளையாட்டு விழா அன்னை மணியம்மையார் விளையாட்டு அரங்கில் 14.8.2026 அன்று சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.

அனைத்து பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங் கிணைப்பாளார் டாக்டர் டி.கிருஷ்ணகுமார் முன்னிலை வகிக்க, சு.பாக்கியலெட்சுமி, தலைமையாசிரியை இவ்விழா விற்கு தலைமையேற்றார்.

சிறப்பு விருந்தினராக திருச் சிராப்பள்ளி, தொழிலாளார் உதவி ஆணையர் (ஓய்வு)  க.லட்சுமி கலந்து கொண்டு நான்கு அணிகளைச் சேர்ந்த மாணவியர்கள் மற்றும் NCC, NSS, Green Crops, JRC, Scout ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, ஒலிம்பிக் சுடர் ஏற்றி அமைதியின் அடையாளமாக வெள்ளை நிற பலூன்களை வானில் பறக்கவிட்டு கொடி ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவிற்கு பெரியார் தொடக்கப்பள்ளி தாளாளர், பெரியார் கல்வி வளாகத்தின் அனைத்து முதல்வர்கள் மற்றும் தலைமையாசிரியைகள் கலந்து கொண்டு மாணவியர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டு களையும் தெரிவித்தனர். முதலாவ தாக பள்ளியின் 11ஆம் வகுப்பைச் சேர்ந்த பா.அன்னப்பூரணி என்ற மாணவி விளையாட்டு விழாவிற்கு வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்றார். அடுத்ததாக மாணவியர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு விதமான உடற்பயிற்சிகளை செய்து காட்டினர். 6ஆம் வகுப்பு மாணவியர்கள் ரிப்பன் டிரில், 7ஆம் வகுப்பு உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியம் தரும் யோகா, 8ஆம் வகுப்பு ஏரோபிக் டிரில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு  மாணவியர்கள் பிளவர் பாஸ்கட் மாஸ் டிரில் போன்ற உடற்பயிற்சி, 12ஆம் வகுப்பு மாணவியர்களின் கோலாட்ட உடற்பயிற்சியும், அதனைத் தொடர்ந்து சிலம்பம், பிரமிடு, கராத்தே போன்ற தற்காப்பு பயிற்சிகளுடன் விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளித்தனர். இறுதியாக பெற்றோர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெற்ற பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மார்ச் ஃபாஸ்ட்-ல் முதல் இடத்தை மஞ்சள் நிற அணியினரும், இரண்டாம் இடத்தை சிவப்பு நிற அணியினரும் பெற்றனர். பள்ளியின் ஒட்டுமொத்த சேம்பியன் பட்டத்தை (overall championship) நீலநிற அணியினரும், இரண்டாம் இடத்தை பச்சை நிற அணியினரும் பெற்றனர். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர் உரை

திருச்சிராப்பள்ளி தொழி லாளர் உதவி ஆணையர் (ஓய்வு) தமது உரையில் தாங்கள் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவியாக இருந்து மீண்டும் இப்பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்தது அரியதொரு வாய்ப்பு சிறப்பான வாய்ப்பு. இந்த சிறப்பான வாய்ப்பை அளித்த பள்ளி நிர்வாகத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாணவர்கள் குறிக்கோளை அடைவதற்கு இடையூறுகளை தாண்டி முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும். படிப்பு மட்டுமே நம்மை வாழ்க்கையில் உயர்த்தாது. படிப்புடன் கூடிய விளையாட்டு அவசியம். விளையாட்டில் ஈடுபடும்போது நமக்கு தன்னம்பிக்கை துணிவு, கூட்டு மனப்பான்மை ஆகியவற்றை பெற்று வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பார்க்கும் மனநிலை ஏற்படும்.  மாணவர்கள் சமூக வலைத்தளங்களை சரியாகப் பயன்படுத்தவேண்டும். தனிமனித ஒழுக்கம் அவசியம். உடல் ஆரோக்கியம் முக்கியம். பெண்களுக்கு படிப்பு என்பது முக்கியம் என்பதை பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்ததில் தான் தெரிந்து கொண்டேன். பெண்களின் முன்னேற்றத்திற்கான பள்ளி. இதில் பயிலும் ஒவ்வொரு மாணவிகளும் சிறப்பாக முன்னேற வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக 11ஆம் வகுப்பைச் சேர்ந்த கா.பிருந்தா என்ற மாணவி நன்றி நவில நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *