24 பெட்டிகளுடன் படுக்கை வசதி கொண்ட புதிய வந்தே பாரத் ரயில்கள்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 17- தூங்கும் வசதி கொண்ட புதிய வந்தே பாரத் ரயில்கள், 24 பெட்டிகளுடன் தயாரிக்கப்படும் என்று அய்சிஎஃப் பொதுமேலாளர் மணீஷ் அகர்வால் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சென்னை அய்சிஎஃப் ஆலையில் கடந்த நிதியாண்டில் 3,405 ரயில் பெட்டிகள் உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 13.2 சதவீதம் அதிகம். இதுபோல, 80 ஆயிரமாவது பயணிகள் ரயில் பெட்டியை தயாரித்தும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம். தற்போது 16 பெட்டிகளுடன் தூங்கும்வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

24 பெட்டிகள் கொண்ட புதிய வந்தே பாரத் ரயிலின் வடிவமைப்பு தயாராக உள்ளது விரைவில் தயாரிப்பு பணி தொடங்க உள்ளது. குறைந்த கட்டணத்தில் வசதியான பயணத்துக்காக ஏசி பெட்டி, பொது பெட்டி மற்றும் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் அடங்கிய புதிய அம்ரித் பாரத் ரயிலையும் தயாரிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *